திமுக கூட்டணி கட்சிகளால் தவெக ஆட்சியை மு.க.ஸ்டாலின் கவிழ்த்து விடுவாரா? மு.வீரபாண்டியன் கூறிய கருத்து!
CPI Secretary Veerapandian Latest Speech: தமிழக வெற்றிக் கழக ஆட்சியை நினைக்கும் போது கவிழ்த்து விடவே தனது கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக கூறுவதும் எண்ணுவதும் தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்கவே திமுக கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக எண்ணுவது தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஜோசப் விஜயின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க வேண்டும். இதன் மூலம் தேச பக்தி பாடல்கள் தமிழகம் எதிரானது கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகளின் ஆதரவு போதுமானதாகும். சட்ட நெறிகளுக்கு புறம்பான எந்த செயலிலும் ஈடுபட்டு ஆதரவை கூறுவது என்பது ஏற்புடையது கிடையாது. மக்கள் வாக்களித்துள்ளனர். இடதுசாரி கட்சிகள் ஆதரவளித்துள்ளோம். 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிப்பது நல்லது. ஆனால், இந்த ஆட்சி நல்ல ஆட்சியாக இருத்தல் வேண்டும்.
தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பலர்
மக்களின் எதிர்பார்ப்புகளையும், மக்களின் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். முன்னாள் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றி. மற்றொரு தேர்தல் திணிக்கப்பட்டு விடக்கூடாது. இந்த இடைப்பட்ட காலத்தை ஆளுநர் பயன்படுத்திவிட கூடாது. பலர் நினைப்பது போல, கல்லெறிவது போல் இந்த ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அதற்காகத்தான் அனுப்பி இருக்கிறார்.
மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!




தவெக ஆட்சியை ஸ்டாலின் கவிழ்ப்பார் என்பது தவறு
அவர் நினைக்கும் போது கவிழ்த்து விடுவார் என்று நினைப்பது, கணிப்பது எல்லாம் தவறாகும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவ்வாறு எண்ணம் இருந்தது இல்லை. நூற்றாண்டு கால வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆட்சியையும் கவிழ்த்ததாக வரலாறு கிடையாது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். அதுதான் மக்களின் விருப்பமாகும். அந்த விருப்பத்திற்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்று தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
இடது சாரி கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி
ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகள் இல்லாததால், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த இந்த கட்சிகளின் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறப்படலாம் எனவும், இதன் மூலம் தமிழக வெற்றிக்கழக அரசு கவிழ்ந்து விடும் எனவும் பேசப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: பயணி எழுப்பிய கேள்வி.. போக்குவரத்து துறை அமைச்சரின் சர்ச்சை பதில்.. வைரலாகும் பேச்சு!