சென்னையில் பயங்கரம்.. “நீ எனக்கு இல்லைனா யாருக்கும் இல்லை” கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
Chennai Crime : சென்னையில் ஆவடி அருகே கள்ளக்காதலை கைவிட்டு பேச மறுத்த கள்ளக்காதலியை அவரது கள்ளக்காதலன் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து அந்த நபரை கைது செய்து சிறையில அடைத்தனர்.
சென்னை மாவட்டம், ஆவடி அருகே உள்ள மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலை பவானி (35 வயது). தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் திருவேற்காடு அருகே உள்ள காடுவெட்டி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர் வீடு கட்டும் போது, அங்கு வந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த முருகன் ( 36 வயது) என்பவருக்கும், கலை பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீடு கட்டுமான பணியின் போது, பல்வேறு உதவிகளை செய்த காரணத்தால் கலை பவானி மற்றும் முருகனிடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வீடு கட்டுமான பணியின் போது, அந்த பணிகளை பார்ப்பதற்காக கலைவாணி அவ்வபோது வந்து சென்றுள்ளார்.
கள்ளக்காதலனுடன் பேசுவதை தவிர்த்த காதலி
அப்போது, முருகனுடன், கலைவாணி திரும்ப செல்வாராம். இதைத் தொடர்ந்து, வீடு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக திருவேற்காடு அருகே உள்ள காடுவெட்டி பகுதியில் உள்ள புது வீட்டில் கலைவாணி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். இதை தொடர்ந்து, கலை பவானி தனது கள்ளக்காதலன் முருகனிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கள்ளக்காதலை துண்டித்தும், அவரை சந்திப்பதையும் கலை பவானி தவிர்த்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: “திமுக vs அதிமுக காலம் முடிந்தது?”.. தவெகவின் அசுர வளர்ச்சி.. உடைத்துப் பேசிய கே.என்.நேரு!!




வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலன்
இது தொடர்பாக கலை பவானியிடம் முருகன் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நீ வீடு கட்டும் போது உனக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். அப்போது பழகும் போது நன்றாக இருந்தது. இப்போது பழகுவதற்கு கசப்பாக உள்ளதா என்று சுட்டிக்காட்டி பேச தொடங்கியுள்ளார். இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை கலை பவானியை பார்ப்பதற்காக முருகன் அவரது வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது, தன்னுடனான கள்ளத்தொடர்பை துண்டித்தது தொடர்பாக முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்
இதில், இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலை பவானியை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்தார். இதில், கலை பவானி ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: வைகாசி விசாகம் : சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு