AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைகாசி விசாகம் : சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் வருகிற மே 29, 2026 அன்று மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

வைகாசி விசாகம் :  சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 May 2026 21:47 PM IST

சென்னை, மே 27 : முருகப்பெருமான் அவதரித்த திருநாள் என கருதப்படும் வைகாசி விசாகம் அன்று முருக பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்து ஊர்வலமாக சென்று முருகனை வழிபடுவதை வழக்கமா வைத்திருக்கிறார்கள். அன்றைய தினம் முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, வைகாசி விசாகத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் வருகிற மே 29, 2026 அன்று மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

இதையும் படிக்க : தென்மேற்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம்: தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை!

அதே போல மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் மே 30, 2026 அன்று இரவு 11.15 புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்

 

11 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் கிளம்பி தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த பெட்டியில் 2 ஏசி பெட்டிகள், 12 ஸ்லீப்பர் கோச், 2 ஜெனரல் செகண்ட் கிளாஸ் கோச் மற்றும் 2 செகண்ட் கிளாஸ் கோச் ஆகியவை இடம் பெற்றிருக்கிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு மே 28, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு பயணிகள் அதிக அளவில் பயணிப்பதால் தேவை கருதி இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : விடைபெற்றான் ‘சில்லிகொம்பன்’.. இரு மாநில மக்களை கண்ணீரில் ஆழ்த்திய ‘செல்லமகன்’!!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் பயணிப்பார்கள் என்பதால் இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மட்டுமல்லாமல் விருதாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் என ரயில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பதால் அந்த பகுதி மக்களும் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Follow Us