AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவாரூருக்கு ரூ.1,427 கோடியில் புறவழிச்சாலை திட்டம் – மத்திய அரசு – என்ன நன்மை?

தமிழ்நாட்டில் திருவாரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.1,427.61 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதன் மூலம் பயண நேரம் 15 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாரூருக்கு ரூ.1,427 கோடியில்  புறவழிச்சாலை திட்டம் – மத்திய அரசு – என்ன நன்மை?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 May 2026 21:11 PM IST

தமிழ்நாட்டில் திருவாரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.1,427.61 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் முதல் தஞ்சாவூர் சாலை. 14.9 கிலோ மீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலை கொண்ட புதிய திருவாரூர் பைபாஸ் சாலை அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  போக்குவரத்து நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாரூருக்கு ரூ.1,427 கோடியில் புறவழிச்சாலை திட்டம்

மேலும், தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடும் பகுதிகளில் கூடுதலாக இரண்டு இடங்களில் ஓவர் பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதின் கட்கரி, இந்த புறவழிச்சாலை திட்டம் மூலம் திருச்சி, கோயம்புத்தூர் போன்ற முக்கிய தொழில் நகரங்களுக்கும், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பு மேம்படும் என்றும், இதனால் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க : 3வது மொழி கட்டாயமா? சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்

இந்த புதிய பைபாஸ் சாலை அடியக்கமங்கலம் – தண்டலை பகுதியிலிருந்து தொடங்கி, அத்திப்புலியூர், ஆண்டிபாளையம், கிடாரங்கொண்டான், பள்ளிவாரமங்கலம், பெரும்புகளூர், இலவங்கார்குடி மற்றும் அனைவாடபதி காலனி உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதின் கட்கரியின் எக்ஸ் பதிவு

 

தற்போது திருவாரூர் நகரில் அதிகமான வாகன நெரிசல் நிலவி வரும் நிலையில், இந்த புறவழிச்சாலை திட்டம் நகர மைய போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வணிக நோக்கங்களுக்காகவும் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் புறவழிச்சாலைக்கு மாற்றப்படுவதால் நகரின் போக்குவரத்து சுமை குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் இடையே பயண நேரம் சுமார் 15 நிமிடங்கள் வரை குறையும் என்றும், சாலை பாதுகாப்பு வசதிகளும் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய நெடுஞ்சாலை, ஏற்கனவே உள்ள மாநில நெடுஞ்சாலைகள் 23 மற்றும் 65 ஆகியவற்றையும் இணைக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்… பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு!

அதேபோல், புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Follow Us