AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா? சி.விஜயபாஸ்கர் நிலைப்பாடு என்ன!

C. Vijayabaskar Latest PressMeet : அதிமுகவில் ஏற்பட்டு வரும் உள்கட்சி பூசலுக்கு நடுவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி . விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா? சி.விஜயபாஸ்கர் நிலைப்பாடு என்ன!
தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 May 2026 15:11 PM IST
தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு,  அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் ஓர் அணியும்,  எஸ். பி. வேலுமணி,  சி. வி. சண்முகம்  தலைமையில் மற்றொரு அணியும் என  இரு அணிகளாக பிரிந்தது.  இதை தொடர்ந்து,  தமிழக வெற்றி கழக அரசுக்கு  எஸ். பி. வேலுமணி  அணி  ஆதரவு தெரிவித்தது.  எடப்பாடி பழனிசாமி அணி  ஆதரவளிக்க மறுத்தது. இதனால்,  இறுதி தரப்பினர்  இடையே  மோதல் போக்கு  அதிகரித்து வந்தது.  இந்த நிலையில்,  எடப்பாடி  அணி மற்றும் எஸ்.பி. வேலுமணி அணி  ஆகியவை ஒன்றாக இணைந்ததாக  தகவல்கள் வெளியாகின.  மேலும்,  அதிமுகவில் இருந்து பல எம்எல்ஏக்கள்  தமிழக வெற்றி கழகத்தில்  இணைவார்கள்  என  பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதியின் எம். எல். ஏ.வுமான சி. விஜயபாஸ்கர்  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று காலை புதுக்கோட்டையில்  அதிமுக மாவட்ட  நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்

அவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கி உள்ளேன்.  நிர்வாகிகள்  படு வேகமாக உள்ளனர்.  அவர்களை  நிதானமாக செயல்படுமாறு  அறிவுறுத்தி உள்ளேன்.  விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக நான் எப்போதும் இருப்பேன்.  எனது தொகுதி மக்களின் நலனே எனக்கு முக்கியம்.  அதிமுகவின் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்களின்  கருத்துக்களை கேட்டு அறிந்ததுவுடன்,  அவர்களது கருத்துக்களுக்கு  மதிப்பளித்துள்ளேன்.

மக்களின் முடிவே எனது முடிவாகும்

கடந்த 2011-  ஆம் ஆண்டில்  இருந்து  பொது வாழ்வில் பயணித்து வருகிறேன்.  கொரோனா காலகட்டத்திலும்  என் உயிரை துச்சம் என நினைத்து  தமிழக மக்களுக்காக  பணியாற்றி உள்ளேன்.  எனவே,  விராலிமலை தொகுதி மக்களின் நலனை எனக்கு முக்கியம் ஆகும்.  என் மீது நம்பிக்கை வைத்து  எனது தொகுதி மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.  மக்களின் முடிவே எனது முடிவு ஆகும். திமுகவில் அதிரடி பரபரப்பு எதுவும் இல்லை.  நான் நிதானமாகவே இருந்து வருகிறேன்.

தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதில்

அதிலும்,  மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில்  உள்ளேன்.  இன்று  மக்களிடம் கருத்து கேட்டது போல,  வரும் காலங்களிலும் கருத்து கேட்டு நிகழ்வுகள் தொடரும்.  இதில்,  அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பெண்கள்  உள்ளிட்டோர்  திரண்டு வந்து தங்களது கருத்துக்களை  பகிர்ந்து கொண்டனர்.  தமிழக வெற்றி கழகத்தில்  இணைவதாக கூறுவது  யூகம்  என்று  தெரிவித்தார்.

Follow Us