AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஒரு மாதத்தில் 90% அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள்”.. சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைவது குறித்துப் பேசிய அவர், "எந்த எம்எல்ஏ-வுக்கும் தவெக எவ்வித ஆஃபரும் கொடுத்துக் கூப்பிடவில்லை. அப்படிப்பட்ட தலைமை எங்களுடையது அல்ல. தலைவர் விஜய் மீதும், கட்சியின் மீதும் உள்ள நம்பிக்கையால் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். தவெக ஒரு குடும்பம் போன்றது என்றார்.

“ஒரு மாதத்தில் 90% அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள்”.. சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா!!
ஆதவ் அர்ஜுனா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 May 2026 12:45 PM IST

எந்த எம்எல்ஏ-வுக்கும் எதையும் ஆஃபர் கொடுத்து தவெக அழைக்கவில்லை, அப்படி ஒரு தலைமை எங்களுக்கு கிடையாது என்றும், இயற்கையாக நேசித்து எங்கள் தலைவர் மீதான நம்பிக்கையில் மட்டுமை வருகிறார்கள் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தமிழக அரசியல் களம் மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்துள்ள மூத்த தலைவர்களை வரவேற்று நிகழ்ச்சி ஒன்றில் அதிரடியாகப் பேசியுள்ளார். அதன்படி, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “அண்ணன் செங்கோட்டையன் தைரியமாக தவெக-வில் இணைய முடிவு செய்து வந்தபொழுது, அதிமுக-வில் இருந்த இபிஎஸ் மற்றும் அங்கிருந்த சீனியர்கள் எல்லாம் கேலி கிண்டல் பேசினார்கள். ‘அங்கே இருக்கும் பசங்களுடைய வயசென்ன? இவருடைய வயசென்ன? சின்னப் பசங்களோடு போய் உட்கார்ந்திருக்கிறார்’ என்று சொல்லி அவரைப் புறக்கணித்தார்கள்.

இதையும் படிக்க: சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து.. திடீரென சென்னை கிளம்பும் முதல்வர் விஜய்!

செங்கோட்டையனை புகழ்ந்த ஆதவ் அர்ஜுனா:

ஆனால், அண்ணனுடைய பொறுமை சாதாரணமானது அல்ல. 1972-இல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கும் பொறுமை அது. அவருக்குத் தமிழக மக்களின் அடிநாதம் என்னவென்று நன்றாகத் தெரியும். எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலும், ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர். இன்றைக்குச் சட்டமன்றத்தில் எங்களை வழிநடத்தக்கூடிய அவைத் தலைவராகவும், சீனியர் அமைச்சராகவும் விளங்குவதாக செங்கோட்டையன் குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளரின் முடிவுகள் அனைத்தும் தொண்டர்களுக்கு எதிராகவே அமைந்தன. அதனால்தான் அதிமுக 14, 15 தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தது. பாஜகவோடு சேர்ந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விகளுக்குப் பிறகும், தொண்டர்களின் உழைப்பை மதிக்காமல் ஒரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி உருவாக்கப்பட்டது.

அதிமுகவில் இருந்து வரும் எம்எல்ஏ-க்கள்:

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைவது குறித்துப் பேசிய அவர், “எந்த எம்எல்ஏ-வுக்கும் தவெக எவ்வித ஆஃபரும் (பணம் அல்லது பதவி) கொடுத்துக் கூப்பிடவில்லை. அப்படிப்பட்ட தலைமை எங்களுடையது அல்ல. தவெக தலைவர் விஜய் மீதும், கட்சியின் மீதும் உள்ள நம்பிக்கையால் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். தவெக ஒரு குடும்பம் போன்றது. இங்கு செங்கோட்டையன் அண்ணன் வரும்பொழுது சொந்தக் குடும்ப உறுப்பினர் போலத் தலைவர் அவருக்கு மரியாதை கொடுத்தார்” என்றார். அதோடு, அதிமுக-விலிருந்து வரும் எம்எல்ஏ-க்கள் நேர்மையாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்து நேர்மையாகத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகவே வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

90% அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுக பக்கம் சாய்ந்து நிற்பதைச் சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, சாதாரண நிலையில் இருந்த அவரை ஜெயலலிதா தான் முதலமைச்சராக்கினார். ஆனால், இன்று ஜெயலலிதாவைத் தூக்கி எறிந்த அதே திமுக-வில் போய் அவர் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த வீழ்ச்சி தங்களுக்கு வரக்கூடாது என்று அதிமுக தோழர்கள் நினைக்கிறார்கள்.

இதையும் படிக்க: “திமுக vs அதிமுக காலம் முடிந்தது?”.. தவெகவின் அசுர வளர்ச்சி.. உடைத்துப் பேசிய கே.என்.நேரு!!

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை வழியில் நடப்பது தவெக மட்டுமே. இபிஎஸ் எடுத்த திமுக ஆதரவு நிலைப்பாட்டால், 90% அதிமுக தொண்டர்கள் தற்போது தவெக-வில் இணைய முற்பட்டுள்ளனர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ஒரே மாதத்தில் அண்ணன் செங்கோட்டையன் வழியில், அதிமுக-வின் 90% ஒன்றிய, கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தவெக-வை நோக்கி வந்துவிடுவார்கள்; தமிழகத்தின் ஒரே நேர்மையான நம்பிக்கை தலைவர் விஜய் மட்டும்தான்” என்று அவர் சவால் விடுத்துப் பேசினார்.

Follow Us