வேளச்சேரியில் பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!
Velachery Crime: சென்னை மாவட்டம், வேளச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். இதில், தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில், சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த 61 வயது மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி செல்வது வழக்கமாகும். இதே போல, சம்பவத்தன்று அந்த மூதாட்டி வேளச்சேரி பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளது. அதற்கு, மூதாட்டியும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அந்த மூதாட்டிக்கு இந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் இருவர் கைது
இதனை சற்றும் எதிர்பாராத அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதனால், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை தேடி வந்தனர். இதில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தொலைபேசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து.. திடீரென சென்னை கிளம்பும் முதல்வர் விஜய்!




10 வயது சிறுமி பாலியல் கொலை சம்பவம்
பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து உள்ள வேளச்சேரி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த 61 வயது மூதாட்டிக்கு ஒரு கும்பல் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, கோயம்புத்தூரில் 10 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
விளாத்திக்குளம் மாணவி பாலியல் கொலை தீர்ப்பு
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12- ஆம் வகுப்பு மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் ஒராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் மற்றும் மூதாட்டிகள் வரை பாலியல் குற்றம் நடைபெற்று வருவது தொடர் கதையாகி வருகிறது.
மேலும் படிக்க: ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் – மீண்டும் கடைகள் திறப்பு