ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்.. தலைமை செயலகத்தில் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் ஜொலிப்பு!
CM Vijay Wearing Silk Vest And Silk Shirt: முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டை அணிந்து தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்திருந்தார். எதற்காக முதல்வர் விஜய் ஆடையை மாற்றினார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வந்த விஜய் கடந்த 2024- ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து தேர்தல் பணியாற்றி வந்த தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன்படி, தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி தொடங்கியது முதலே விஜய் தனக்கான ஆடைக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதில், கட்சி மாநாடு, தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் வெள்ளை நிற சட்டை, பெய்ஜ் நிற பேண்ட் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது, முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து கருப்பு வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வருகிறார்.
பட்டு வேஷ்டி – சட்டையில் தலைமைச்செயலகம் வந்த விஜய்
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை ( மே 29) பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். இதனை பார்த்த உயர் அதிகாரிகள் முதல் தலைமைச் செயலக பணியாளர்கள் வரை அனைவரும் வியந்தனர். சென்னை நீலாங்கரையில் தனது நெருங்கிய நண்பரும், மேனேஜருமான ஜெகதீஷ் பழனிசாமி இல்ல நிகழ்ச்சியில் முதல்வர் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து அப்படியே தலைமைச் செயலகம் வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ராஜபாளையம் முதல் ஜெர்மன் ஷெப்பர்ட் வரை… கொடையில் இன்று நாய் கண்காட்சி; அனுமதி முற்றிலும் இலவசம்!




வெள்ளை நில சட்டை – பெய்ஜ் நிற பேண்ட்
தேர்தலுக்கு முன்பாக விஜய் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை, பெய்ஜ் நிற பேண்ட் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் முக்கிய இடம் பிடித்தது. இதேபோல, அவர்களும் வாக்குப்பதிவு நாளில் இதே உடையில் வந்திருந்தனர். மேலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்க சென்ற போதும் விஜய் இதே ஆடையை அணிந்திருந்தார். அண்மையில் முதல்வராக பதவி ஏற்ற பின்னரும் கருப்பு கோட் சூட் அணிந்து வரும் விஜய், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்க சென்ற போதும், இதே கோட் சூட் ஆடையை அணிந்திருந்தார்.
அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்த விஜய் உடனே கருப்பு நிற கோட் சூட்டுக்கு மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பின்பற்றி தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் முதல்வர் ஜோசப் விஜய் வருகை தந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: இன்று தொடங்க இருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ திட்டம் திடீர் ரத்து.. 2-வது முறை தள்ளிப்போனதன் பின்னணி என்ன?