AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சபரிமலை போறீங்களா? பக்தர்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை

கேரளத்தில் தொடரும் கனமழை காரணமாக சபரிமலை பயணத்தை மறு பரிசீலனை செய்ய பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?  பக்தர்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Aug 2026 16:04 PM IST

சென்னை, ஆகஸ்ட் 2 : கேரளத்தில் தொடரும் கனமழை காரணமாக சபரிமலை பயணத்தை மறு பரிசீலனை செய்ய பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் தொடரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கனமழை நீடிப்பதால் மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த ஆரஞ்சு எச்சரிக்கை பொருந்தும். திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “டி.கே. சிவகுமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் நீண்ட கால நெருங்கிய உறவு!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!

இம்மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழையும், மணிக்கு 50 கி.மீ வேகம் வரையிலான பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசான மழையும், மணிக்கு 40 கி.மீ வேகம் வரையிலான பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள சில ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், மத்திய நீர் ஆணையம் ஆரஞ்சு அஎச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பாயஸ்வினி ஆற்றுக்கு (எரிஞ்சிப்புழா நிலையம்) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஆறுகளில் எந்தச் சூழலிலும் இறங்கவோ அல்லது அவற்றைக் கடக்கவோ கூடாது. ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க : அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் “பாஜகவின் திடீர் மூவ்!”.. தமிழக முதல்வர் விஜய்க்கு வந்த கடிதம்!!

இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஆறுகளில் எந்தச் சூழலிலும் இறங்கவோ அல்லது அவற்றைக் கடக்கவோ கூடாது. ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் மேலும் அதிரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us