AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் ஆகஸ்ட் 2, 2026 இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  – வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Aug 2026 15:15 PM IST

சென்னை, ஆகஸ்ட் 2 : தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஆகஸ்ட் 2, 2026 இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3, 2026 நாளை கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 2, 2026 இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3, 2026 கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்று புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடகா கபினி அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு!!

மேலும் மேற்சொன்ன 2 நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம் மற்றும் இதர பகுதிகளில் 7-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளத்தில் அனைத்து மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.இதனால் கனமழை காரணமாக பாதிப்புகள் மேலும் தீவிரமடையும் என்பதால் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

Follow Us