AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோடை விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள்.. லிஸ்ட் இதோ!

Summer Special Trains: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களுக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இரு கோடை கால ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன,

தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோடை விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள்.. லிஸ்ட் இதோ!
தூத்துக்குடியில் இருந்து கோடை கால சிறப்பு ரயில்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 18 Apr 2026 08:37 AM IST

தமிழகத்தில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள காரணத்தால் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு பயணம் செய்வது வழக்கம் ஆகும். இதனால், கோடை வெயில் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படும். இதனை தவிர்க்கும் வகையில், தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே 2 வாரங்களுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கோடைகால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து கோடை கால சிறப்பு ரயில் (வண்டி எண்:06018) ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27- ஆம் தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து கோடை கால சிறப்பு ரயில்

இதே போல, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு ( வண்டி எண்:06017) ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 28- ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ( வண்டி எண்: 06018) திங்கள்கிழமை இரவு 11:30 மணிக்கு புறப்படும் கோடைகால சிறப்பு ரயில் மறுநாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ( வண்டி எண்: 06017) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் கோடைகால சிறப்பு ரயில் மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடையும்.

மேலும் படிக்க: பெரம்பூர் களத்தில் விஜய்.. இன்று வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க திட்டம்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!!

கோடை கால ரயில்கள் நின்று செல்லும் நிலையங்கள்

இந்த இரு ரயில்களும் தூத்துக்குடி, மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 17 எல். ஹெச். பி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் வசதிக்காக கோடை கால ரயில்கள்

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை மற்றும் திருமணம் உள்ளிட்ட விசேஷ காலங்கள் இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்வார்கள். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு காணப்படும். இதனை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போதும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: “10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..

Follow Us