இனி சத்தமாக பேசினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி..
அதன்படி, அதிக சத்தத்துடன் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே, மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து வசதியாக சென்னை மெட்ரோ ரயில் திகழ்கிறது. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.
சென்னை, ஏப்ரல் 17, 2026: மெட்ரோ ரயிலில் தற்போது ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான ஒழுங்குமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிக சத்தத்துடன் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே, மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து வசதியாக சென்னை மெட்ரோ ரயில் திகழ்கிறது. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.
எளிதாக அலுவலகங்களுக்கு செல்லவும், எந்த இடையூறும் இல்லாமல் நேரத்திற்கு திட்டமிட்ட இடத்தை அடையவும் மெட்ரோ ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது, பொதுமக்களுக்கான புதிய ஒழுங்குமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சத்தமாக செல்போனை பயன்படுத்தினால் அபராதம்:
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்து பயணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி தெரிந்துகொள்வது?
மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002, பிரிவு 59ன் கீழ், சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பது அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறிப்பாக:
- அலைபேசியில் உரத்த குரலில் பேசுதல்,
- ஹெட்போன்கள் இன்றி இசை அல்லது வீடியோக்களை இயக்குதல்,
- மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் ஸ்பீக்கர் மோடு பயன்படுத்துதல்
போன்ற செயல்கள் தண்டனைக்குரியவையாகும்.
இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவையானால் அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: தேர்தல் பணிமனைக்கு முன் விசில் சின்னத்தில் கோலமிட்ட விஜய்.. வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு..
எனவே, சக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்தவும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் உரத்த குரலில் பேசுதல் மற்றும் ஸ்பீக்கர் மோடு பயன்பாட்டை தவிர்க்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.