வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி தெரிந்துகொள்வது?
TN Election Guide : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர் பட்டயலில் பெயர் உள்ளதை எப்படி தெரிந்து கொள்வது என பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறிருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் காரணமாக மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனையடுத்து சட்டன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, வாக்குச்சாவடி எது, வாக்குப்பதிவு நேரம் என்ன போன்ற விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைன் மூலம் எளிதாக தெரிந்துகொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.
வாக்குப்பதிவு தேதி மற்றும் நேரம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. அனைத்து மக்களும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பில் இருந்து மௌன காலம் அமலில் இருக்கும். அந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தலுக்கு 10,633 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்!




வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது எப்படி?
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்கள் பெயரை இணையதளம் மூலம் சரிபார்க்கலாம் என தெரிவித்துள்ளது. அது எப்படி என்பதை படிப்படியாக தெரிந்துகொள்ளலாம்.
- முதலில் electoralsearch.eci.gov.in அல்லது nvsp.in இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- அதில், Search in Electoral Roll” அல்லது Search Your Name in Voter List என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நம் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள EPIC எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் பெயர் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி Search என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், உங்கள் வாக்குச்சாவடி போன்ற விவரங்கள் காட்டும்.
வாக்களிக்க தேவையான ஆவணங்கள்
தேர்தலில் வாக்களிப்பதற்கு உங்களுக்கு வாக்கு சீட்டு மட்டும் போதாது. உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடிக்கு மொபைல் போன், கேமரா போன்ற எந்தவித மின்னு சாதனங்களையும் எடுத்து செல்லக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தபால் வாக்குப்பதிவு.. யார் யார் இதை பயன்படுத்தலாம்?
வாக்களிப்பது என்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அது நம் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதால், தேர்தல் நாளில் சிக்கலை சந்திக்காமல் இருக்க மேல் சொன்ன விவரங்களை முன் கூட்டியே சரிபார்த்துக்கொள்வது நல்லது.