AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய ரெயில் பெட்டியில் உணவகம்…. ரயில் பெட்டி உணவகத்தை அறிமுகப்படுத்திய ரயில்வே – என்ன ஸ்பெஷல்?

Train Coach Restaurants : பயண கட்டணமில்லா வருவாய் கொள்கை என்ற திட்டத்தின் அடிப்படையில் சேலம் ரயில்வே கோட்டம் தனியார் மூலம் பழைய ரயில் பெட்டியில் உணவகம் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சேலம் அயோத்தி பட்டணத்தில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய ரெயில் பெட்டியில் உணவகம்…. ரயில் பெட்டி உணவகத்தை அறிமுகப்படுத்திய ரயில்வே – என்ன ஸ்பெஷல்?
ரெயில் பெட்டியில் உணவகம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Aug 2026 08:58 AM IST

சேலம், ஆகஸ்ட் 18 : சேலம் அயோத்திப் பட்டிணத்தில் பழைய ரயில் பெட்டியில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு ரயில் பெட்டி உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் ஈரோடு மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பயணக் கட்டணமில்லா வருவாய் கொள்கை என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி உணவகம் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டி உணவகத்தை அறிமுகப்படுத்திய ரயில்வே

பயண கட்டணமில்லா வருவாய் கொள்கை என்ற திட்டத்தின் அடிப்படையில் சேலம் ரயில்வே கோட்டம் தனியார் மூலம் பழைய ரயில் பெட்டியில் உணவகம் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சேலம் அயோத்தி பட்டணத்தில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் – விருதாச்சலம் ரயில் பாதையில் அயோத்தி பட்டணம் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய ரயில் பெட்டியை உணவகம் போல வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காஞ்சிபுரத்தில் 2 இளைஞர்கள் கொடூர கொலை.. பெரும் பரபரப்பு.. எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் குவிப்பு!

புதிய ரயில் பெட்டி உணவகம்

 

இந்த ரயில் பெட்டி உணவகத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் திறந்து வைத்தார். ரயில் பெட்டியில் உணவகம் என்ற இந்த புதிய ரெஸ்டாரண்ட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் பயணங்களின் போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசி சிரித்தபடி உணவு சாப்பிட்டு செல்லும் அனுபவத்தை இந்த ரயில் பெட்டி உணவகம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!

இந்த திட்டம் தற்போது ரயில்வேக்கு சொந்தமான 1000 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதனை அரசே ஏற்று நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.46.20 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தை தொடர்ந்து இந்த திட்டம் ஈரோடு, திருப்பூர், போத்தனூர், மேட்டுப்பாளையம், உதகமண்டலம் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us