AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசியலை விட விவசாயிகளின் நலனே முக்கியம் – காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் உறுதி

தமிழகத்திற்கு காவரி நீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாட முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், மாநில காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்குச் சாதகமான முடிவையே எடுக்கும் என்றும் கூறினார்.

அரசியலை விட விவசாயிகளின் நலனே முக்கியம் – காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் உறுதி
டி.கே.சிவகுமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Aug 2026 17:09 PM IST

தமிழகத்திற்கு காவரி நீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாட முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆகஸ்ட் 2, 2026 இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், காவிரிப் படுகை மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், மாநில காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்குச் சாதகமான முடிவையே எடுக்கும் என்றும் கூறினார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் உறுதி

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டிருந்தது; காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவாக மாற்றப்பட்டிருந்தது. இயற்கை நமக்கு உதவியதால் தற்போதைய பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க : 2026-27 பட்ஜெட்: முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எதிர்பார்ப்புகள் என்னென்ன?

மேலும் பேசிய அவர், கர்நாடகாவில் மழைப்பற்றாக்குறை நிலவுகிறது. இதுவரை 35 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. 3,500 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு கவலையை ஏற்படுத்தியிருந்தது. 9.5 டி.எம்.சிநீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டிருந்தது. மாநில மக்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப மழை பெய்துள்ளது. கபினி அணைக்கு 24 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் கே.ஆர்.எஸ் (KRS) அணையில் 22 ஆயிரம் கன அடி நீர் பாய்கிறது. குடகுப் பகுதியில் மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. குடிநீருக்காக 40 டி.எம்.சி நீரை இருப்பு வைக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. முன்னாள் முதல்வர்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க : “டி.கே. சிவகுமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் நீண்ட கால நெருங்கிய உறவு!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!

டெல்லியிலிருந்து வழக்கறிஞர்கள் குழு வந்துள்ளது. அரசுத் தலைமை வழக்கறிஞரும் கூட்டத்தில் பங்கேற்றார். தற்போது கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரிகளை நிரப்ப கால்வாய்கள் வழியாக நீர் திருப்பி விடப்படுகிறது. குடிநீர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடினமான சூழல்அடிப்படையில் சட்டரீதியாகப் போராட வேண்டும் என்றார்.

ஜூன் மாதத்தில் 2.9 டி.எம்.சி. நீர் பற்றாக்குறை இருந்தது. ஜூலை மாதத்தில் 1.5 டி.எம்.சி. நீரை நாங்கள் திறந்துவிட்டோம். இதுபோன்று இதுவரை எந்த அணையிலிருந்தும் நீர் திறந்துவிடப்பட்டதில்லை. கபினி அணை முழுமையாக நிரம்பியுள்ளது. எனவே, அணைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நேற்று மதியத்திற்குப் பிறகு கபினியிலிருந்து நீரை வெளியேற்றினோம் என்று அவர் கூறினார்.

Follow Us