திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். இந்த நிலையில் அவர் ஜூன் 10, 2026 இன்று திடீரென திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 10 : அதிமுகவில் நீண்ட காலமாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஜூன் 10, 2026 இன்று திடீரென திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெஞ்சமின் தன்னை திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். குறிப்பாக, சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் பல்வேறு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
இதையும் படிக்க : “சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!




கட்சியின் உட்கட்சி விவகாரங்களிலும், நிர்வாக ரீதியிலான பணிகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பெஞ்சமின், திடீரென கட்சியில் இருந்து விலகியது அதிமுக தலைமைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் மீது பெஞ்சமின் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் மற்றும் செயல்பாட்டு முறைகளில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த அவர், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். முன்னதாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பெஞ்சமின் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு அடிபட்டது.
இதையும் படிக்க : இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை – நடமாடும் ரோந்து வாகனம் சேவை தொடக்கம் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தவெக தலைமைக்கும் அவருக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அவர் திமுகவில் இணைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெஞ்சமினின் இந்த வருகை, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்தும் என்றும், வரவிருக்கும் தேர்தல்களில் திமுகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுகவிலிருந்து மிக முக்கியமான நிர்வாகி ஒருவர் விலகியிருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல அதிருப்தியாளர்கள் அதிமுகவை விட்டு விலகக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.