AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோவிலில் மீண்டும் விபரீதம் – சிக்கிய பெண் பக்தர்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் மீண்டும் ஒரு பெண் பக்தர் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜூலை 25, 2026 நேற்று ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர் இடுக்கி பிள்ளையார்கோவிலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோவிலில் மீண்டும் விபரீதம் – சிக்கிய பெண் பக்தர்
திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோவில்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Jul 2026 18:27 PM IST

திருவண்ணாமலை, ஜூலை 26 : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் மீண்டும் ஒரு பெண் பக்தர் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜூலை 25, 2026 நேற்று ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர் இடுக்கி பிள்ளையார்கோவிலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோவிலில் மீண்டும் விபரீதம்

திரு​வண்​ணா​மலை கிரிவல பாதை​யில் உள்ள முக்​கிய கோயில்​களில் இடுக்கு பிள்​ளை​யார் கோயில் உள்​ளது. இதனை மோட்ச துவாரம் என கூறப்​படு​கிறது. இக்​கோயி​லில் சிறிய குகை போன்ற அமைப்​பில் உள்​ளது. இக்​கோயி​லின் பின் வாசல் வழி​யாக ஒருக்​களித்து படுத்​த​வாறு உள்ளே நுழைந்​து, கைகளை ஊன்​றிய​வாறு நகர்ந்து முன் வாசல் வழி​யாக வெளியே வரவேண்​டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்தவுடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்வது வழக்கம். கிரிவலம் வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இடுக்கு பிள்ளையார் கோயிலில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டுச் சென்று வருகின்றனர்.

இதையும் படிக்க : சிவகாசி அருகே பட்டாசு குடோன் விபத்து… பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு.. பெரும் சோகம்!

இந்த கோவிலில் உள்நுழைந்து சாமியை தரிசித்து வெளியே வரும்போது நம் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் இதற்கு மோட்ச துவாரம் என மக்கள் அழைக்கின்றனர். இந்த கோவிலில் உள் புகுந்து வெளியே வரும்போது புதிதாக பிறந்த உணர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் இந்த நம்பிக்கையை அதிகம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த மணி குமார் என்ற பக்தர், ஜூலை 25, 2026 நேற்று இந்த இடுக்கி பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்துள்ளார். இந்த நிலையில் உள்ளே நுழைந்து வெளியேறும்போது உடல் பருமன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த பக்தர்கள் அவரை வெளியே மீட்டு 108 ஆம்​புலன்ஸ் மூலம் திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : வீடு புகுந்து பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் – காதலிக்க மறுத்ததால் விபரீதம்

இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஜூலை 26, 2026 இன்றும் இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்குள் சென்று வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். இதனையடுத்து பக்தர்கள் உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us