AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புது டெல்லிக்கு வருகைதந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Jun 2026 17:33 PM IST

புதுடெல்லி, ஜூன் 10 : நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புது வருகைதந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 11, 2026 அன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் 3 நாட்கள் பயணமாக ஜூன் 10, 2026 இன்று டெல்லி சென்றுள்ளார்.

குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கடந்த மே 27, 2026 அன்று முதன்முறையாக டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்த அவர், தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் விஜய், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிலுவதை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

குடியரசுத் தலைவரின் எக்ஸ் பதிவு

 

இந்த நிலையில் தற்போது 3வது முறையாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜூன் 11, 2026 நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்?

இதனையடுத்து வருகிற ஜூன் 12, 2026 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு செல்லும் முதல்வர் விஜய், உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Follow Us