AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“சனிப்பெயர்ச்சியை போல திமுகவும் பெயர்ச்சி அடைய வேண்டும்”.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!

Nainar Nagendran criticize DMK: மிக மோசமான சூழ்நிலைக்கு தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. இதனை இறைவனால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதனால்தான் கடவுளிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். சனி பெயர்ச்சியாகி இருப்பது போல், திமுகவும் தமிழகத்தில் இருந்து விரைவில் பெயர்ச்சி அடைய வேண்டும் என்றார்.

“சனிப்பெயர்ச்சியை போல திமுகவும் பெயர்ச்சி அடைய வேண்டும்”.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!
நயினார் நாகேந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Mar 2026 07:19 AM IST

காரைக்கால், மார்ச் 08: சனிப்பெயர்ச்சியை போல தமிழகத்தில் இருந்து திமுகவும் பெயர்ச்சி அடைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியை யொட்டி நேற்று தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிக்க: அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் மாற்றம்… பாஜகவின் ரகசிய திட்டம்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வீசிய அரசியல் வெடிகுண்டு!

முதல்வரின் கட்டுபாட்டில் காவல்துறை இல்லை:

2 வயது பெண் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதலமைச்சரால் போதை பொருள் புழக்கத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம். திருநெல்வேலி மற்றும் சிவகங்கையில் கஞ்சா அடித்த விட்டு பொதுமக்களையும் தாக்கியுள்ளனர்.

திமுகவும் பெயர்ச்சியடைய வேண்டும்:

மிக மோசமான சூழ்நிலைக்கு தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. இதனை இறைவனால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதனால்தான் கடவுளிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். சனி பெயர்ச்சியாகி இருக்கிறது. திமுகவும் தமிழகத்தில் இருந்து விரைவில் பெயர்ச்சி அடைய வேண்டும். இந்து மதத்திற்கும் சனாதனத்திற்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சி விலக்கப்பட வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.

இதையும் படிக்க: திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..

மக்களுக்கு தாங்க முடியாத சுமை:

அறிவிப்பு ஏதும் இன்றி அனைத்து வரிகளும் ஏற்றப்படுகிறது. தமிழக மக்களுக்கு தாங்க முடியாத சுமை. இந்த ஆட்சி வந்த பிறகு ரூ.10.30 லட்சம் கோடி கடன். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன். இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் மோசமான சூழ்நிலைக்கு தமிழ்நாடு போய்விடும். ஆகவே தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us