AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்… நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்… சீமான் அறிவிப்பு!

Puducherry Naam Tamilar Party Candidates: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். இந்த கட்சியின் வேட்பாளர்கள் குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்… நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்… சீமான் அறிவிப்பு!
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 07 Mar 2026 21:40 PM IST

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அந்த மாநிலத்தின் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சியின் அறிமுக கூட்டம் இன்று சனிக்கிழமை ( மார்ச் 7 ) நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கட்சியின் புதுச்சேரி மாநில வேட்பாளர்களை அறிவித்தார் அதன் விவரம் பின் வருமாறு:

மேலும் படிக்க: ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

  • மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் ஓவியர் வெங்கடேசன்.
  • திருபுவனை தொகுதியில் பொறியாளர் ரஞ்சித்
  • ஊசுடு தொகுதியில் வழக்கறிஞர் கௌரி
  • மங்கலம் தொகுதியில் சமூக சேவகர் சுப்பிரமணியன்
  • வில்லியனூர் தொகுதியில் வெங்கடேசன்
  • உழவர்கரை தொகுதியில் சமூக செயற்பாட்டாளர் சித்ரா
  • கதிர்காமம் தொகுதியில் சுபஸ்ரீ.
  • இந்திரா நகர் தொகுதியில் தேவிகா
  • தட்டாஞ்சாவடி தொகுதியில் அழகு கலை வல்லுநர் கார்த்திக் குமாரி.
  • காமராஜர் நகர் தொகுதியில் ஆசிரியர் கௌரி
  • லாஸ்பேட்டை தொகுதியில் இளங்கலை பட்டதாரி ஜெயசித்ரா
  • காலாப்பட்டு தொகுதியில் சமூக செயற்பாட்டாளர் காமராஜ்
  • முத்தியால்பேட்டை தொகுதியில் சமூக செயற்பாட்டாளர் பர்மீதா பேகம்
  • ராஜ்பவன் தொகுதியில் செவிலியர் கற்பகவல்லி
  • உப்பளம் தொகுதியில் சமூக செயற்பாட்டாளர் தேவிப்பிரியா
  • உருளையன்பேட்டை தொகுதியில் அழகு கலை வல்லுநர் அனிதா வீரப்பன்
  • நெல்லிதோப்பு தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் சிவக்குமார்
  • முதலியார்பேட்டை தொகுதியில் பொறியாளர் வேலவன்
  • அரியாங்குப்பம் தொகுதியில் தொழிற்கல்வி கட்டடக்கலை பட்டதாரி சுந்தர வடிவேல்
  • மணவெளி தொகுதியில் முதுநிலை அரசியல் அறிவியல் பட்டதாரி மா.செ. இளங்கோவன்.
  • ஏம்பலம் தொகுதியில் கணினி பட்டய பட்டதாரி குமரன்
  • நெட்டப்பாக்கம் தொகுதியில் முதுநிலை அரசியல் அறிவியல் பட்டதாரி ஞானப்பிரகாசம்
  • பாகூர் தொகுதியில் இளங்கலை ஆங்கிலம் பட்டதாரி நவீன் சிவராஜ்
  • காரைக்கால்- நெடுங்காடு தொகுதியில் விக்னேஷ்
  • திருநள்ளாறு தொகுதியில் பொறியாளர் வினோத்,
  • காரைக்கால் வடக்கு தொகுதியில் அனுசுயா
  • காரைக்கால் தெற்கு தொகுதியில் இளங்கலை வணிகவியல் பட்டதாரி மித்துவான்
  • நிரவி திருப்பட்டினம் தொகுதியில் சமூக செயற்பாட்டாளர் மாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் என்று பாராமல் நம் வீட்டு பிள்ளைகள் என்று எண்ணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு உங்கள் வீட்டு பிள்ளையாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நமது வாக்கு விற்பனைக்கு அல்ல என்கிற உறுதியை ஏற்று உங்கள் பிள்ளைகளான எங்களுக்கு உங்களது வாக்குகளை தந்து உங்களை நம்பி நிற்கும் பிள்ளைகளை ஏமாற்றினோம் என்ற வரலாற்றுப் பிழை நிகழாமல் எங்களை நம்பி வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்தார்கள் என்ற வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். புரட்சி எப்போதும் வெல்லும். உங்கள் பிள்ளைகள் எங்களது வெற்றி அதை சொல்லும். நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாகும். நாம் தமிழர். தமிழ்த்தாய் வாழ்க என்று கூறினார்.

மேலும் படிக்க: K.A.Sengottaiyan Tamil Nadu Election: தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய முகம் கே.ஏ.செங்கோட்டையன்…!

Follow Us