AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DMK MP Kanimozhi: காங்கிரஸூடன் அமர விருப்பமில்லை.. மக்களவையில் தனி இருக்கை கேட்ட கனிமொழி எம்பி!

DMK MPs in Lok Sabha: திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெளியேறி, 5 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை கொடுத்தது. இந்தநிலையில் மக்களவையில் திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்பிக்களுடன் தொடர்ந்து அமர்வது பொருத்தமாக இருக்காது என கனிமொழி எம்பி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

DMK MP Kanimozhi: காங்கிரஸூடன் அமர விருப்பமில்லை.. மக்களவையில் தனி இருக்கை கேட்ட கனிமொழி எம்பி!
திமுக கனிமொழி எம்பிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 May 2026 15:54 PM IST

சென்னை, மே 8: கடந்த 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது கடந்த 2026 மே 4ம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களையும், திராவிட முன்னேற்ற கழகம் 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், காங்கிரஸ் (Congress) 5 இடங்களையும், பாமக நான்கு இடங்களையும், IUML 2 இடங்களையும், சிபிஐ 2 இடங்களையும், சிபிஐ(எம்) 2 இடங்களையும், விசிக 2 இடங்களையும் வென்றன. பாரதிய ஜனதா கட்சி (பாஜக), தேமுதிக மற்றும் அமமுக ஆகியவை தலா ஒரு இடத்தை வென்றன. இதில், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், பெரும்பான்மை இல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெளியேறி, 5 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை கொடுத்தது. இந்தநிலையில் மக்களவையில் திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்பிக்களுடன் தொடர்ந்து அமர்வது பொருத்தமாக இருக்காது என கனிமொழி எம்பி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ALSO READ: தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் – காங்கிரஸ் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மக்களவை சபாநாயகருக்கு கனிமொழி எம்.பி கடிதம்:


மக்களவையில் இருக்கை அமைப்பை மாற்றி அமைக்குமாறு கோரி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”மக்களவையில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை அமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளவே இக்கடிதத்தை எழுதுகிறேன். மாறிவரும் அரசியல் சூழல்களையும், இந்திய தேசிய காங்கிரசுடனான எங்களது கூட்டணி முடிவுக்கு வந்துவிட்ட நிலையையும் கருத்தில் கொள்ளும்போது, ​​அவையில் அவர்களுடன் அருகிலேயே தற்போதைய இருக்கை அமைப்பில் எங்கள் உறுப்பினர்கள் தொடர்ந்து அமர்ந்திருப்பது பொருத்தமானதாக இருக்காது” என தெரிவித்திருந்தார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி:

கடந்த 20 ஆண்டுகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவர, கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டணி 2011 சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பிரிந்ததால், காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ALSO READ: ஆட்சியமைக்கும் எந்த கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது – வெளியான பரபரப்பு அறிக்கை

அதனைத் தொடர்ந்து, 2016 சட்டமன்றத் தேர்தல்களுக்காக இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்தது. தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது.

Follow Us