AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு ஆதரவா? மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

TVK Vijay : தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக கட்சியின் உயர்நிலை குழுவில் ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய்க்கு ஆதரவா? மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விஜய் - திருமாவளவன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 May 2026 14:50 PM IST

சென்னை, மே 8  : தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக கட்சியின் உயர்நிலை குழுவில் ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி விஜய்யிடன் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று இந்திய அளவில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டலும் வெற்றி பெற்றார்.

சட்டப்படி ஒருவர் 2 தொகுதிகளில் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு, அல்லது பெரம்பூர் ஆகிய 2ல் ஒரு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் னஎ கூறப்படுகிறது. இதற்கிடையில் 108 தொகுதிகளில் வென்றுள்ள தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியும், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. மேலும் 118 எம்எல்ஏகள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்”.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அக்கட்சிகள் தவெகவுடன் இணைவது தொடர்பாக மே 8, 2026 அன்று கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி


இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மே 8, 2026 இன்று மாலை 5 மணிக்கு உயர்நிலை குழுவின் இணைய வழி கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்கப்படும். கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை தெரிந்துகொள்ள வேண்டியதும், அவர்களின் உணர்வுகளையும் தெரிந்துகொள்வது எனது கடமை என்றார்.

அதிமுக – திமுக சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக பேசப்பட்டு வருவது குறித்து கேட்டபோது பதில் அளித்த அவர், தோழமை கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் எந்த கருத்தைும் முன் கூட்டியே கூற முடியாது. உயர்நிலை கூட்டம் முடிவடைந்த பின் மீண்டும் மே 9, 2026 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கட்சியின் முடிவை நாங்கள் அறிவிப்போம் என்றார்.

இதையும் படிக்க : ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் தவெக.. முட்டுக்கட்டை போடும் திராவிட கட்சிகள்?

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள ஓர் கட்சியின் தலைவர் என்ற வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். அப்போது அவர் இந்த கூட்டணி மக்கள் தீர்ப்பை மதிக்கிறது. தவெக ஆட்சி அமைக்க தடையாக இருக்க மாட்டோம். மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என்கிற கருத்தை என்னிடம் கூறினார்.

Follow Us