AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்”.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

“இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்”.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை
எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 May 2026 11:22 AM IST

“எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்” என அதிமுக எம்.பி தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் முக்கிய கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

தவெகவுக்கு ஆதரவு கிடைக்குமா?

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட, இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம், காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது.

திமுக – அதிமுக ஒன்றிணைய திட்டம்?

இதனிடையே,  தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. திமுக கூட்டணியை உடைத்து தவெக முன்னேறுவது ஸ்டாலினின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், அதிமுக-வுடன் இணைந்து தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி:

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்,  சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி தம்பிதுரை,  “எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்” என்று கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும், நல்லாட்சி வரும்,  நல்லாட்சி தருவார் எடப்பாடி பழனிசாமி என்று கூறிய அவர், அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். சில ஆலோசனைகள் நடக்கின்றன, ஆனால் அதை இப்போது வெளியே சொல்ல முடியாது என்றும் அவர் சூசகமாக கூறினார்.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி?

இதன் மூலம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதா? அல்லது அதிமுக இரண்டரை ஆண்டு கால ஆட்சி, திமுக இரண்டரை ஆண்டு கால ஆட்சி என்ற முடிவுடன் ஆட்ச அமைய உள்ளதா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது. காங்கிரஸ் செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், திராவிட கட்சிகள் இல்லாத மூன்றாவது கட்சியை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவதற்கு எதிராகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முடிவுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் முடிவை வைத்தே அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..

Follow Us