AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

TVK Vijay : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. தற்போது அந்த கட்சிக்கு 118 எம்எல்ஏகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.

தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
தவெக விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 May 2026 16:39 PM IST

சென்னை, மே 7 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக ஆட்சியமைக்க ஆளுநரை சந்திக்க உரிமைகோரியது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான ஆதரவை நிரூபிக்க தவறியதாக கூறி விஜய்யை ஆட்சி பொறுப்பேற்க ஆளுநர் அழைக்கவில்லை

இதனையடுத்து ஆளுநரின் செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  பெரும்பான்மையை விஜய் சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் அல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு முன்னிருக்கும் வாய்ப்புகள் என்ன?

ஆட்சியமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் தற்போது வரை தவெகவிற்கு காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து தவெகவிற்கு தற்போது வரை 113 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளையும், தேமுதிக 1 தொகுதியிலும் வென்றுள்ளது. இதில் இந்திய முஸ்லீம் லீக் தவிர  மீதமுள்ள விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினால் கூடுதலாக  7 தொகுதிகள் கிடைக்கும் இது விஜய் ஆட்சியமைக்க போதுமானதாக இருக்கும்.

அதே போல பாமக 4 தொகுதிகளையும், அமமுக 1 தொகுதிகளையும் பெற்றுள்ளது. என 5 தொகுதிகள் சேர்ந்தாலும் தவெகவிற்கு கூடுதல் பலமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏகள் தவெகவுடன் இணையும் முனைப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக தலைமை அதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us