தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு!
Tamil Nadu IAS Officers transfered: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், எந்தெந்த துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுப்பணி துறையின் முதன்மை செயலாளராக இருந்து வந்த சுன்சோங்கம் ஜடக் சிரு பணியிட மாற்றம் செய்யப்பட்டு செல்வராஜுக்கு பதிலாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வராஜ் ஐஏஎஸ் பொதுப்பணி துறை முதன்மை செயலாளராகக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசின் சிறப்பு செயலாளர் சந்தீப் நந்தூரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு சஜ்ஜன்சிங் சவான்க்கு பதிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர்
இதேபோல, மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த உமா மகேஸ்வரி, ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்ட மகேஸ்வரி ரவி குமாருக்கு பதிலாக கைத்தறி துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பேரூராட்சிகள் துறை இயக்குனராக இருந்து வந்த பிரதீப் குமார் சுரேஷ்குமாருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசின் துணை செயலாளராக இருந்து வந்த அழகு மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!




பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மாற்றம்
இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக இருந்து வந்த டாக்டர். சுரேஷ் குமார் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இருந்து வந்த சித்ரா விஜயன் சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக பணியிடமற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த நிலையில், முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அரசுத் துறையில் தொடரும் அதிரடி பணியிடமாற்றம்
இந்த நிலையில், தற்போதும் பல்வேறு அரசு துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்து வந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் இது போன்ற பணியிட மாற்றங்கள் நிகழும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!