AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இரவு நேரத்தில் நிர்வாண ஊர்வலம்.. ரகசிய பூஜைகள் செய்து கிராமத்தை அலறவிட்ட தம்பதி!

Thirupattur Couple Issue | திருப்பத்தூரை சேர்ந்த தம்பதி ஒன்று சில நாட்களாக இரவு நேரத்தில் நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்துள்ளது. இதனை அந்த கிராம மக்கள் தட்டி கேட்ட நிலையில், எங்களை தடுத்தால் நாசமாய் போய்விடுவீர்கள் என அந்த தம்பதியினர் மிரட்டியுள்ளனர்.

இரவு நேரத்தில் நிர்வாண ஊர்வலம்.. ரகசிய பூஜைகள் செய்து கிராமத்தை அலறவிட்ட தம்பதி!
பூஜையில் ஈடுபட்ட கணவன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Sep 2026 07:40 AM IST

திருப்பத்தூர், செப்டம்பர் 08 : திருப்பத்தூர் (Thirupattur) அருகே கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இரவு நேரத்தில் ஆடையின்றி ஊருக்கு சுற்றி வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கிராம் மக்கள் அவர்களிடம் அது குறித்து கேட்டபோது, என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார் என கூறி அந்த நபர் கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரவு நேரத்தில் ஆடையின்றி உலா வந்த கணவன் – மனைவி

திருப்பத்தூர் மாவட்டம், கரம்பூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனி. 56 வயதாகும் இவருக்கு 48 வயதில் தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி, சில நாட்களாக தங்களது வீட்டிற்குள் வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தான், அவர்கள் இருவரும் திடீரென தங்களுக்குள் சாமி வந்துவிட்டதாக கூறி, இரவு நேரங்களில் நிர்வாணமாக வலம் வர தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : கேரள கொடூர விபத்து.. தமிழக மாணவர்கள் மது போதையில் கார் ஓட்டினார்களா? தடயவியல் மருத்துவர் பகீர் தகவல்!

கிராம மக்களுக்கு சாபம் கொடுத்த தம்பதி

தம்பதியின் இந்த வினோத நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள், “எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்” என்று கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி, தங்களுக்கு சாமி வந்ததை போல வீடியோ பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும்  என்றும் அவர்கள் அந்த கிராம மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!

தம்பதியை கைது செய்த போலீசார்

இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், தம்பதியை கிராம மக்களின் பிடியில் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார், அவர்களது நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us