திருடச் சென்ற வீட்டில் படுத்து தூங்கிய நபர்.. தெலங்கானாவில் சுவாரஸ்ய சம்பவம்!
Man Fell Asleep While Going To Stole | தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் திருடச் சென்ற வீட்டில் இளைஞர் ஒருவர் படுத்து தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கைது செய்த போலீஸ், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி, ஆகஸ்ட் 15 : தெலங்கானாவில் (Telangana) திருடுவதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கேயே படுத்து தூங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் அவ்வப்பொது திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்த நிலையில், சம்பவத்தன்று மது போதையில் திருடச் சென்ற அவர் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருடச் சென்ற வீட்டில் படுத்து தூங்கிய இளைஞர்
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், ஜல்பள்ளி வாடி, முஸ்தப காலனியை சேர்ந்தவர் ஷோயப் என்கிற புர்கான். 19 வயதாகும் இவர், மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 14, 2026) அதிகாலை 4.30 மணிக்கு தான் வசிக்கும் அதே தெருவில் வசிக்கும் நஜ்முதீன் என்ற நபரின் வீட்டில் திருடச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : உத்தரகாண்ட் சுரங்கத்தில் தண்ணீர், மண் புகுந்து விபத்து.. 7 பேர் உயிரிழப்பு; 2 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்




அப்போது குடும்பத்தினர் அனைவரும் ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், பக்கத்து அறைக்கு சென்ற அவர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியுள்ளார். பின்னர், அங்கிருந்த படுக்கையில் சற்று நேரம் படுத்துள்ளார். காலை 7 மணி வரை அவர் அங்கேயே படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், காலையில் எழுந்து வந்த குடும்பத்தினர் இளைஞர் நகை, பணத்தை திருடிவிட்டு தூங்கிக்கொண்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : வடிவேலு ஸ்டைலில்… திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
கையும், கலவுமாக கைது செய்த போலீஸ்
வீட்டில் திருடன் இருப்பதை கண்ட குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளன. அவரிடம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.