AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Independence Day Celebration 2026 Live: சுதந்திர தினம் 2026.. கோலாகல கொண்டாட்டங்கள்!

Independence Day Parade 2026 Live Updates : இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த கோலாகல நிகழ்வை கொண்டாட இந்தியா முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிர்வாகம் என நாடே சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

C Murugadoss
C Murugadoss | Updated On: 15 Aug 2026 08:13 AM IST
Share
Independence Day Celebration 2026 Live: சுதந்திர தினம் 2026.. கோலாகல கொண்டாட்டங்கள்!
சுதந்திர தினம் 2026

LIVE NEWS & UPDATES

  • 15 Aug 2026 08:13 AM (IST)

    மக்களுக்கே முக்கியத்துவம்:

    பல சவால்களை தாண்டி மக்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது – பிரதமர் மோடி

  • 15 Aug 2026 07:53 AM (IST)

    மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை

    மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என பிரதமர் உரை

  • 15 Aug 2026 07:51 AM (IST)

    இந்தியாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது

    இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தொழில் உற்பத்தியில் இந்தியா முன்னேறி வருகிறது என பிரதமர் உரை

  • 15 Aug 2026 07:50 AM (IST)

    இந்தியாவின் சாதனைகளை உலகமே உற்று நோக்குகிறது

    இந்தியாவையும், இந்தியாவின் சாதனைகளையும் உலகமே உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் கூறினார்.

  • 15 Aug 2026 07:49 AM (IST)

    ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும்

    வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் என பிரதமர் மோடி உரை

  • 15 Aug 2026 07:47 AM (IST)

    உறுதியுடன் நாடு முன்னேறி வருகிறது

    புதிய உறுதியுடன் நாடு முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி பெருமிதம்.

  • 15 Aug 2026 07:41 AM (IST)

    சுதந்திர தின உரையாற்றுகிறார் பிரதமர்

    தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.

  • 15 Aug 2026 07:39 AM (IST)

    தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

    80வது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

  • 15 Aug 2026 07:22 AM (IST)

    பிரதமர் மோடி செங்கோட்டைக்கு வருகை

    செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

  • 15 Aug 2026 07:12 AM (IST)

    நாட்டிற்கு சிறப்பு உரை:

    தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டிற்குச் சிறப்பு உரையாற்றுகிறார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பப் புரட்சி, பாதுகாப்பு வலிமை மற்றும் 2047-க்குள் இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கான இளைஞர்களின் பங்கு குறித்து அவர் தனது உரையில் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

  • 15 Aug 2026 07:09 AM (IST)

    தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பிரதமர்

    வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து, பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மி.மீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது.

  • 15 Aug 2026 07:06 AM (IST)

    முதல்முறையாக செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ பாடல்:

    தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்தவுடனேயே ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்படும் புதிய மரபு முறை பின்பற்றப்படுகிறது.

  • 15 Aug 2026 07:04 AM (IST)

    80-வது சுதந்திர தின பெருவிழா

    இந்திய திருநாடு தனது 80-வது சுதந்திர தின பெருவிழாவை ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ச்சியடைந்த இந்தியா 2047) எனும் தொலைநோக்கு இலக்குடன் மிகக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இந்த பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில், வழக்கமான மரபுகளில் இருந்து சில முக்கிய மாற்றங்களுடன் இந்த ஆண்டின் விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையிலிருந்து தேசிய அளவிலான கொண்டாட்டங்களை வழிநடத்துவார். அதேபோல் தமிழ்நாட்டை பொறுத்தவரை புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு கொண்டாடும் முதல் சுதந்திரதினம் என்பதால் முதல்வர் விஜய் கொடியேற்றவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. முன்னதாக டெல்லியில் சில நாட்களாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி நாட்டின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் வந்துள்ளன. இந்நிலையில் இன்றைய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்

நேரலை:

Published On - Aug 15,2026 7:00 AM

Follow Us