நீல சக்கரத்தின் நிஜ கதை.. தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Ashoka Chakra Independence Interesting Facts : நாடு முழுவதும் நாளை 80- ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நமது நாட்டின் தேசிய கொடியில் இருக்கும் அசோக சக்கரத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அசோக சக்கரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்
நாடு முழுவதும் 80- ஆவது சுதந்திர தினம் நாளை ( சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது, இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவது வழக்கமாகும். இந்த கொடியில் வெள்ளை நிறத்தின் பின்னணியில் அடர் நீல நிறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள அசோக சக்கரம் 24 வாரங்களை கொண்ட தர்ம சக்கரத்தின் வடிவம் ஆகும். இந்த அசோக சக்கரம் பற்றிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். இதில்,
மேலும் படிக்க: சுதந்திர தினத்தில் சுட்டீஸ்களை அசத்த வைக்கும் வண்ணமயமான ஆடை..!
இதையும் படியுங்கள்

Independence Day Wishes: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முதல் வாழ்த்து மெசேஜ் வரை: சுதந்திர தின ஸ்பெஷல்

President Speech: சுதந்திர தினம் 2026.. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் குடியரசுத்தலைவர்.. நேரலை விவரம்

சுதந்திர தினம் 2026.. தயார் நிலையில் ஏற்பாடுகள்.. நேரலையில் எங்கு பார்க்கலாம்?

Indian Independence Year : இந்தியா கொண்டாடுவது 79-ஆவது சுதந்திர தினமா? 80- ஆவது சுதந்திர தினமா? குழப்பமும்- உண்மையும்!
- தேசியக் கொடியின் நடுவில் அசோக சக்கரம் இடம்பெற்றுள்ளது. இது, 24 ஆரங்களை கொண்டதுடன், 1947- ஆம் ஆண்டு ஜூலை 22- ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- அசோக சக்கரம் என்பது 24 ஆரங்கள் கொண்ட தர்மசக்கரத்தின் ஒரு வடிவமாகும். கடமை சக்கரம் என்பது அசோக சக்கரத்தின் மற்றொரு பெயராகும்.
- மகாத்மா காந்தி, சிவப்பு மற்றும் பச்சை நிற பதாகையில் ஒரு கொடியை வடிவமைக்க பிங்காலி வெங்கய்யாவை நியமனம் செய்தார். லாலா ஹன்ஸ்ராஜ் ராட்டை கருத்தை இயக்கத்தில் கொண்டு வந்தார்.
- அசோகரின் பல ஆணைகளில் இந்த ராணுவ சக்கரம் இடம்பெறுவதால் அது அசோக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அசோகரின் சிங்கத் தூண் உள்ளது.
- அசோக சக்கரத்தின் ஒவ்வொரு ஆரமும் வெவ்வேறு வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க சுவாரசியமான விஷயம் ஆகும். இந்த சக்கரத்தின் ஆரங்கள் ஒரு நாளின் 24 மணி நேரத்தை குறிப்பதால் இது கால சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- அசோக சக்கரம் பௌத்தம், இந்து மதம் மற்றும் ஜைன மதத்தின் உருவமைப்புகளை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உருவமைப்பு தர்ம சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- பிற்காலத்தில் தேசிய கொடிய வடிவமைத்தவர்கள் அசோக சக்கரத்தின் வாரங்களுக்கு வேறு ஒரு விளக்கத்தை அளித்தனர். ஒவ்வொரு ஆரமும், இந்தியா தொடர்ந்து வளர்த்தெடுக்கும் ஒரு விஷயத்தை குறிக்கிறது.
- அசோக சக்கரத்தின் ஆரங்கள் வீரம், தன்னலமின்மை, சகிப்புத்தன்மை, நீதி, ஆன்மீக ஞானம், அன்பு, நல்வாழ்வு, ஒழுக்கம், செழிப்பு, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிக்கிறது.
- 24 ஆரங்கள், புத்தர் போதித்த 12 காரண தொடர்புகளையும், பதிச்ச முப்படம் கோட்பாட்டையும், நேர் வரிசையிலும் பின்னோக்கு வரிசையிலும் குறிக்கின்றன. முதல் 12 ஆரங்கள் துன்பத்தின் 12 நிலைகளை குறிக்கின்றன. அடுத்த 12 ஆரங்கள் காரணமும் இல்லை, விளைவும் இல்லை என்பதை குறிக்கிறது.
- அசோகரின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் முக்கிய பங்காற்றினார். மேலும், பௌத்த மன்னரை நினைவு கூறும் வகையில் கொடியில் அசோக சக்கரத்தை பயன்படுத்த அவர் முயன்ற வழிகளில் இதுவும் ஒன்றாகும்.
தேசியக் கொடியின் 24 ஆரங்கள் கூறுவது என்ன
- முதல் ஆரம்- கற்பு.
- 2- ஆவது ஆரம்- ஆரோக்கியம்.
- 3- ஆவது ஆரம்- அமைதி.
- 4- ஆவது ஆரம்- தியாகம்.
- 5- ஆவது ஆரம்- அறநெறி.
- 6- ஆவது ஆரம்- சேவை.
- 7- ஆவது ஆரம்- மன்னிப்பு.
- 8- ஆவது ஆரம்- காதல்.
- 9- ஆவது ஆரம் நட்பு.
- 10- ஆவது ஆரம் சகோதரத்துவம்.
- 11- ஆவது ஆரம் அமைப்பு.
- 12- ஆவது ஆரம்- நலன்.
- 13- ஆவது ஆரம்- செழிப்பு.
- 14- ஆவது ஆரம்- தொழில்.
- 15- ஆவது ஆரம்- பாதுகாப்பு.
- 16- ஆவது ஆரம்- விழிப்புணர்வு.
- 17- ஆவது ஆரம்- சமத்துவம்.
- 18- ஆவது ஆரம்- அர்த்தம்.
- 19- ஆவது ஆரம்- கொள்கை.
- 20- ஆவது ஆரம்- நீதி.
- 21- ஆவது ஆரம்- ஒத்துழைப்பு.
- 22- ஆவது ஆரம்- கடமைகள்.
- 23- ஆவது ஆரம்- உரிமைகள்.
- 24- ஆவது ஆரம்- ஞானம் ஆகியவற்றை குறிக்கிறது.
மேலும் படிக்க: Independence Day Tricolour Food: சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண விருந்து உங்கள் வீட்டிலேயே இப்படி செய்யலாம்!
Follow Us