AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவுக்கு மட்டும் அனுமதியா? கோவை என்ன பாகிஸ்தானா? நீதிமன்றம் கேள்வி

Coimbatore Rally Permission Row : கோயம்புத்தூரில் தேசியக் கொடியுடன் பேரணி பாஜகவிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்றும் கோவை என்ன பாகிஸ்தானா என்றும் கேள்வி எழுப்பியது.

தவெகவுக்கு மட்டும் அனுமதியா? கோவை என்ன பாகிஸ்தானா? நீதிமன்றம் கேள்வி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Aug 2026 16:13 PM IST

சென்னை, ஆகஸ்ட 14 : கோயம்புத்தூரில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை என்ன ஆப்கானிஸ்தானா பாகிஸ்தானா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த பாஜக சார்பில் காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு

இதனையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, கோயம்புத்தூர் என்ன ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் இருக்கிறதா? தேசிய கொடியை ஏந்தி பேரணி செல்வது குற்றமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படிக்க : வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது – அமைச்சர் நிர்மல் குமார்..

மேலும பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை. பாஜகவிற்கும் அனுமதி அளிக்கவில்லை. தவெகவிற்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். தேசிய கொடியை ஏந்தியதற்காக உயிர்நீத்த திருப்பூர் குமரன் வாழ்ந்த நாட்டில் தேசிய கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பதா ? என சராமாரி கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், கோவையில் பாஜக பேரணி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த கருத்து அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக நீட் தேர்வையும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்ற அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யக்கோரி கடந்த ஜூலை 30, 2026 அன்று சைக்கிள் பேரணி நடத்த திக சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி வழக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எத்ரிப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சுந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி செல்ல பாஜகவுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்த 2 சம்பவங்களையும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க : கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் கோயம்புத்தூரில் கடந்த ஆகஸ்ட் 6, 2026 அன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல் துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் கோவையில் மட்டும் பேரணி செல்ல பாஜவுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us