இரவில் லேட்-நைட் பிரியாணி ஆசையா? ஆபத்தை தவிர்க்க இத தெரிஞ்சுக்கோங்க!
Late-Night Biryani: இரவு நேரத்தில் தாமதமாக பிரியாணி சாப்பிடுவது அதிக கலோரி மற்றும் மசாலா காரணமாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இவ்வாறு சாப்பிடுவது உடல் எடை உயர்விற்கும், சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்குப் பெரிய பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இரவு 10 மணிக்கு மேல் பிரியாணி உண்பது உடலின் செரிமான மண்டலத்திற்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. பிரியாணியில் உள்ள அதிக கலோரிஸ் மற்றும் மசாலாப் பொருட்கள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. இதனால் இரவில் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிறு உப்புசம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. தொடர்ந்து தாமதமாக பிரியாணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிப்பதுடன் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேர பிரியாணியைத் தவிர்ப்பது அவசியமாகும். தவிர்க்க முடியாத சூழலில், பிரியாணியை அளவோடு உட்கொண்டு, சாப்பிட்ட பின் 2 முதல் 3 மணி நேரம் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும். மேலும், தயிர் பச்சடி சேர்த்துக்கொள்வதும், சாப்பிட்ட பிறகு லேசான நடைப்பயிற்சி மேற்கொள்வதும் செரிமானத்திற்கு உதவிபுரியும்.
இரவில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இரவு 10 மணிக்கு மேல் தாமதமாக பிரியாணி உண்பது செரிமான மண்டலத்திற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரியாணியில் நிறைந்துள்ள அதிகப்படியான கலோரிகள், கொழுப்பு, மசாலாப் பொருட்கள் மற்றும் இறைச்சி ஆகியவை வயிற்றை கனமாக்குகின்றன. பகல் நேரத்தைப் போல இரவில் உடலியக்கம் இல்லாததால், செரிமானம் மந்தமாகி நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நீண்டகால பாதிப்புகளும் யாருக்கு அதிக ஆபத்து?
தொடர்ந்து இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிட்டு வரும்போது, அது உடலில் தேவையில்லாத கலோரிகளைச் சேர்த்து உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது தூக்கத்தைக் கெடுத்து, மறுநாள் அதிக பசியை உண்டாக்கும். குறிப்பாக நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் GERD எனப்படும் அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவில் பிரியாணி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Also Read: விக்கல் நின்று போகாமல் தொடர்கிறதா? உடலுக்குள் இருக்கும் இந்த பிரச்சனைகளை கவனியுங்கள்!
ஆரோக்கியமாக உட்கொள்ளும் எளிய வழிமுறைகள்
இரவில் பிரியாணியைத் தவிர்க்க முடியாத சூழலில், அளவைக் குறைத்து சிறிதளவு மட்டும் சாப்பிடலாம். சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்லாமல் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகே தூங்க வேண்டும். செரிமானத்திற்கு உதவ பிரியாணியுடன் தயிர் அல்லது காய்கறி சாலட்களைச் சேர்க்கலாம். மேலும் உணவுக்குப் பின் 15 நிமிடங்கள் லேசான நடைப்பயிற்சி மேற்கொள்வதும், செயற்கை குளிர்பானங்களைத் தவிர்ப்பதும் உடலுக்கு நன்மையளிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.