ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்.. கடை முன் குவிந்த பெண்கள்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி!

DMK Rs.8000 Housewife Coupon: திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்ற இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான மாதிரி கூப்பனால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் எதிர்க் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்.. கடை முன் குவிந்த பெண்கள்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி!

ரூ.8000 கூப்பனால் தருமபுரியில் பெரும் பரபரப்பு

Published: 

12 Apr 2026 20:09 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 பரிசு கூப்பன் வாக்குறுதி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கு தேவையான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை புதிதாகவோ அல்லது எக்ஸ்சேஞ்ச் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் இந்த திட்டமாகும். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட அள்ளி, பெரியாம்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது, அந்த பகுதி மக்களுக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு ரூ.8000 மதிப்பிலான மாதிரி கூப்பன்களை கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர்.

வீட்டு உபயோக கடை முன் குவிந்த பெண்கள்

இந்த கூப்பனில் ரேஷன் கார்டு எண், வாக்காளர் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்ட பெண்கள் உண்மையான ரூ.8000 கூப்பன் என நினைத்து அருகில் உள்ள வீட்டு பொருட்கள் விற்பனை கடைக்கு சென்று பொருட்களை கேட்டுள்ளனர். அப்போது, அந்த கூப்பன்களை வாங்கி பார்த்த கடையின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இது போலியான கூப்பன் எனவும் இது தொடர்பான கூப்பன் தற்போது வழங்கப்படவில்லை எனவும், இது குறித்த தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும்… மு. க. ஸ்டாலின் அழைப்பு!

பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்கள்

இதனை கேட்டு, கடை முன் திரண்ட பெண்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர், பெருத்த ஏமாற்றத்துடன் அந்த பெண்கள் வீடு திரும்பினார். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், திமுகவினர் மாதிரி கூப்பனை கொடுத்ததை உண்மை கூப்பன் என நம்பி கடை முன் குவிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காரிமங்கலம் பகுதியில் திமுகவினரின் பிரச்சார வாகனத்தில், ரூ,8000 மதிப்பிலான மாதிரி கூப்பன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

விமர்சனத்துக்குள்ளான ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம்

இது தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில், திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரியில் மாதிரி கூப்பன் கொடுத்து வாக்கு சேகரித்ததும், அதனை பெற்ற பெண்கள் கடை முன் குவிந்து ஏமாற்றம் அடைந்ததும் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மேலும் படிக்க: இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. வீடு புகுந்து 6 பேரை தூக்கிய போலீஸ்… முழு விவரம் உள்ளே!

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?