தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கும் முக்கிய முடிவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படத் துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மே 16ஆம் தேதி, தமிழ் திரைப்படத் துறை பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இடையே முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.