பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான 'வேள்பாரி'யை அடிப்படையாகக் கொண்டு தனது நீண்ட நாள் கனவுப் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இந்த நாவலின் திரைப்பட உரிமையைப் பெற்றுள்ளதாகவும், இதனை மூன்று பாகங்களாக மிகவும் பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவரே முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.