V.Jayaraman Tamil Nadu Election: 5 முறை தொடர் வெற்றியாளர் வி.ஜெயராமன் … 6-ஆவது முறை வெற்றிக்கு வித்திடுமா உடுமலைப்பேட்டை தொகுதி!
Tamil Nadu Elections 2026: அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக்கொண் எம்எல்ஏக்கள் பட்டியலில் இடம் பிடித்து வரும் பொள்ளாச்சி வி. ஜெயராமன் மீண்டும் அதே வெற்றியை தக்க வைத்துக் கொள்வாரா.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவரும், தற்போதைய எம். எல். ஏ. வுமாக இருந்து வருபவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவர், கடந்த 1953- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி வரதராஜு செட்டியார்- சரஸ்வதி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். இவர், எம். ஜி. ஆர். காலத்தில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தார். அப்போது, எம். ஜி. ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்த போது ஜெயலலிதா அணியில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். அப்போது, 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் களமிறக்கப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன் தோல்வியை தழுவினார். 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். ஆனால், அந்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார் ஜெயராமன்.
அமைச்சர் பொறுப்பு வகித்த பொள்ளாச்சி ஜெயராமன்
இதைத் தொடர்ந்து 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் களமிறங்கிய ஜெயராமன் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழில் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சராக இருந்து வந்தார். பின்னர் 2004- ஆம் ஆண்டு உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன் 2006- ஆம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்து வந்தார்.
மேலும் படிக்க: Kolathur Constituency Election 2026: முதல்வர் ஸ்டாலினின் தொகுதி.. கொளத்தூரில் மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?




உடுமலைப்பேட்டையில் வெற்றியை நிரூபித்த ஜெயராமன்
இதை தொடர்ந்து, 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் களம் இறங்கிய பொள்ளாச்சி ஜெயராமன் தனது வெற்றியை மீண்டும் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, 2011 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மாறி போட்டியிட்ட பொள்ளாச்சி ஜெயராமன் அங்கேயும் தனது வெற்றியை நிலை நிறுத்தினார். உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களில் பொள்ளாச்சி ஜெயராமனும் ஒருவர் ஆவார்.
மீண்டும் தடம் பதிப்பாரா பொள்ளாச்சி ஜெயராமன்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் களம் இறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான கால சூழ்நிலையும் கனிந்துள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் களமிறக்கப்பட்டால் மீண்டும் வெற்றியை நிலை நிறுத்தி தனது கொடியை பறக்கவிடுவாரா என்பதை தொகுதி மக்களும், அவர்கள் அளிக்கும் வாக்குகளும் தான் முடிவு செய்யும்.
மேலும் படிக்க: ரூ.3 கோடிக்கு லேண்ட் ரோவர்… கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதியில்லையா? ஓபனாக பேசிய பிரேமலதா!