“சென்னை சூப்பர் 6” தலைநகரை உலக தரத்திற்கு மாற்றும் முக்கிய வாக்குறுதிகள்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியீடு!
DMK Election Promises: சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு முதல் அதிக வருமானம் தரத்கூடிய வேலை வாய்ப்புகள் வரை பல்வேறு அதிரடி தேர்தல் வாக்குறுதிகளா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தமிழக மக்களுக்கான வாக்குறுதிகளை அனைத்து கட்சிகளும் வெளியிட்டுள்ளன. அந்த வகையில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்கான தனி தேர்தலை அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 19) நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று ” சென்னை சூப்பர் 6″ என்ற திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகளை வெளியிட்டார். இதனை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பெற்றுக்கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பதாவது:
மேலும் படிக்க: “மகனை முதல்வராக்கவே ஸ்டாலின் உழைக்கிறார்”.. ஈரோட்டில் அமித் ஷா வைத்த ‘வாரிசு’ அரசியல் விமர்சனம்!!




ஏஐ- போக்குவரத்து மேலாண்மை
- சென்னை மாவட்டத்தில் புதிதாக ஆயிரம் மினி பேருந்துகள் இயக்கப்படும்.
- சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்து பயணிகளின் பயண நேரத்தில் 20 சதவீதம் வரை சேமிப்பதற்காக செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.
- விலங்குகள் மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய்களை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகரிக்கப்படும்.
- தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் சார்பில் அரசு நிதி உதவியுடன் பொது வசதிகள் ஏற்படுத்தப்படும். - மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலம் முறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு- அதிக வருமானம் தரும் வேலை
- பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக வெளிச்சம் உடைய தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
- கலை, இசை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு தனித்துவ உலக தர பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
- 2027- ஆம் ஆண்டுக்குள் எண்ணூர் முதல் பூஞ்சேரி வரை சென்னை எல்லை சாலை திட்டம் போன்று 10-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- 2028- க்குள் மெட்ரோ விரிவாக்க பணிகள் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் 2027-க்குள் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படும்.
- 20 ஆயிரம் உயர் ஊதிய வேலை வாய்ப்புகள், ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு.
- உலக தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு.
- உயர்தர திறன் மேம்பாட்டு பயிற்சி.
- ஆராய்ச்சி மையம் மற்றும் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வேலை வாய்ப்புகள் ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: “தவெகவினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்”.. அன்புமணி ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!!