AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு.. விஜய் அதிரடி அறிவிப்பு!!

Tamilnadu Assembly Election: தமிழக வெற்றிக் கழகம் இந்த ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கும் வேளையில், இதுபோன்ற தடைகளைத் தாண்டி விஜய் எடுத்துள்ள இந்த முடிவு "எந்தத் தடையையும் தகர்ப்போம்" என்ற சிக்னலை அரசியல் கட்சிகளுக்குத் தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு.. விஜய் அதிரடி அறிவிப்பு!!
சுயேட்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Apr 2026 10:24 AM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், சேலம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான எடப்பாடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நகர்வுகள் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக-வின் அதிகாரப்பூர்வ வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சூழலில், நடிகர் விஜய் தற்போது ஒரு சுயேச்சை வேட்பாளருக்குத் தனது முழு ஆதரவை அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..

எடப்பாடியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், வேட்புமனு பரிசீலனையின் போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான முக்கிய காரணங்களாக, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்புமனுவை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பது விதி. ஆனால், தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்தனர். வேண்டுமென்றே கவனக்குறைவாக மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இதனால், முக்கியத்துவம் வாய்ந்த எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை உருவானது. இதனை “சின்னத்தை முடக்கச் செய்யப்பட்ட சதி” என அக்கட்சித் தலைமை கருதுகிறது.

விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு:

தனது கட்சியின் சின்னம் முடக்கப்பட்டாலும், எடப்பாடி தொகுதி மக்களைக் கைவிடப் போவதில்லை என்ற முடிவில் விஜய் உறுதியாக உள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், நமது ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் நிர்வாகியாகப் பணியாற்றிய நமது சகோதரர். எனவே, எடப்பாடி தொகுதி தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் இவரை நமது வேட்பாளராகக் கருதி செயல்பட வேண்டும்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

குறுக்கு வழி அரசியலுக்குப் பாடம்:

அதோடு, பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் இவரது வரிசை எண் 12 ஆகும். எடப்பாடியில் தவெக-வின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றி பெற நினைத்தவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் இந்த வெற்றி அமைய வேண்டும் என விஜய் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Follow Us