AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஷூட்டிங் போயிட்டு வந்து உடனே எம்.எல்.ஏ ஆகிடுவீங்களா?”.. சுந்தர் சி-யை வறுத்தெடுத்த பிரகாஷ் ராஜ்!

Tamilnadu Assembly Election: மதுரை மத்திய தொகுதி திமுக-வின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு தற்போதைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்ற வலுவான வேட்பாளர்களை எதிர்த்து சுந்தர் சி போட்டியிட வேண்டியுள்ளது. சினிமா செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

“ஷூட்டிங் போயிட்டு வந்து உடனே எம்.எல்.ஏ ஆகிடுவீங்களா?”.. சுந்தர் சி-யை வறுத்தெடுத்த பிரகாஷ் ராஜ்!
பிரகாஷ் ராஜ், சுந்தர்.சி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Apr 2026 12:06 PM IST

Tamilnadu Polls 2026: இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது, அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் ஒரு தொகுதியும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தாமரைச் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், அதிமுக சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..

மதுரையில் சுந்தர்.சி தீவிர பரப்புரை:

தொடர்ந்து, அவர் வேட்பாளராக அறிவக்கப்பட்டது முதல், அத்தொகுயில் சுந்தர்.சி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். மதுரையில் படப்பிடிப்புகளுக்காகப் பலமுறை வந்திருந்தாலும், தற்போது ஒரு வேட்பாளராக மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அவருக்கு ஆதரவாக குஷ்புவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.

பிரகாஷ் ராஜ் பரப்புரை:

இதனிடையே, தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்படி, பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், மதுரையில் சுந்தர்.சி போட்டியிடுவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்வி:

இதுகுறித்து பேசிய அவர், வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள். இதுவரை மதுரை மக்களுக்காகவோ அல்லது அரசியல் பிரச்சனைகளுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளர் அறிவிப்பு வந்ததும் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என வந்துவிட்டீர்களே. மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?”

கொள்கை என்ன? “புதிய நீதிக்கட்சியில் நீங்கள் இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதன் கொள்கைதான் என்ன?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மனைவிக்குக் கிடைக்காத சீட்:

“உங்கள் மனைவி குஷ்பு 10 ஆண்டுகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரே பல கேள்விகளைக் கேட்கிறார். அவருக்குக் கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என நீங்கள் யோசிக்கவில்லையா? இந்தச் சீரழிவை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?”

“சினிமாவில் ஒரு இயக்குநர் ஆவதற்கு எத்தனையோ விஷயங்களைக் கஷ்டப்பட்டுக் கற்றிருப்பீர்கள். ஆனால், எந்த அனுபவமும் இல்லாமல் உடனடியாக எம்.எல்.ஏ மட்டும் ஆகிவிடுவீர்களா?” என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.

மதுரையில் சவாலான களம்:

மதுரை மத்திய தொகுதி திமுக-வின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு தற்போதைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்ற வலுவான வேட்பாளர்களை எதிர்த்து சுந்தர் சி போட்டியிட வேண்டியுள்ளது. சினிமா செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

நிர்வாகிகளின் அதிருப்தி:

“உள்ளூர் வேட்பாளர் இல்லையே” என்ற அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், சுந்தர் சி தனது நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி இளைஞர்களையும் பெண்களையும் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். ஏப்ரல் 4-ம் தேதி முதல் தனது தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அவர், மதுரை நகரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us