தங்கம் வாங்கப்போறீங்களா? 2வது நாளாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் உயர்ந்து வந்தது. இந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் உயர்ந்து வந்தது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை மட்டும் சவரனுக்கு அதிரடியாக 2,160 ரூபாய் அளவுக்கு குறைந்த தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,05,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?




தொடர்ந்து சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் உலக பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளே தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கம் விலை
சென்னையில் கடந்த ஜூலை 27, 20222 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜூலை 28, 2026 நேற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறந்து ஒரு சவரன் ரூ.1,05,720க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிக்க : EPFO : ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.1.44 லட்சம் கோடி.. உங்களுக்கு வட்டி வந்துவிட்டதா?
தொடர்ந்து சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் உலக பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளே தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. இந்த நிலையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் தங்கம் வாங்குவதற்கு இது நல்ல நேரமாக கருதப்படுகிறது.