AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பிஎஃப் பணம் உள்ளிட்ட சேவைகளை பெற இது கட்டாயம்.. இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரை!

EPFO Important Update To Employees | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பயனர்களுக்கு பல்வேறு புதிய சேவைகள் மற்றும் அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பயனர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : பிஎஃப் பணம் உள்ளிட்ட சேவைகளை பெற இது கட்டாயம்.. இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2026 16:31 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தனியார் துறை ஊழியர்களின் முதன்மை சேமிப்பாக இந்த இபிஎஃப்ஓ உள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போதெல்லாம் பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுக்க முயற்சி செய்வர். இந்த நிலையில்,  இந்த ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் பிஎஃப் பணத்தை எடுப்பது சிக்கலாகிவிடும் என கூறப்படுகிறது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பயனர்களுக்கு அறிவுரை

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் வேலைக்கு சேர்ந்த தேதி, வேலையில் இருந்து விலகிய தேதிய ஆகியவற்றை சரியாக அப்டேட் செய்யா வேண்டும் என கூறியுள்ளது. இந்த தகவல்களில் சிறிய தவறு இருந்தாலும் பிஎஃப் மற்றும் பென்ஷன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டிஜிட்டல் தமிழ்நாடு 2.0.. வாட்ஸ்அப்பில் 275 அரசுச் சேவைகள்.. இ-சேவை 2.0 திட்டம் அறிமுகம்.. பட்ஜெட்டில் மெகா அறிவிப்புகள்!

இபிஎஃப்ஓ கூறியுள்ளது என்ன?

இது குறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், உங்களுடைய பணி தொடர்பான விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி விவரங்கள் சரியாக இல்லாத பட்சத்தில் பிஎஃப் பணம் எடுப்பது, பிஎஃப் பணத்தை ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றுவது மற்றும் பென்ஷன் பெறுவது உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு; விரைவில் திட்ட அறிக்கை.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

இபிஎஃப்ஓ 2026 ஆம் ஆண்டுக்கான புதிய விதிகள் மற்றும் இணையதளத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊழியர்கள் தங்களது விவரங்கள் அனைத்தையும் சரியாக வைத்திருக்கும் பட்சத்தில் தான் பிஎஃப் பணத்தை எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பெற முடியும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us