Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லை வரும் அமித் ஷா.. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு.. பாஜகவின் பிளான் இதுதான்!

Amit Shah Tamil Nadu Visit : திருநெல்வேலியில் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (2025 ஆகஸ்ட் 22) மதியம் நெல்லைக்கு வருகை தருகிறார்.

நெல்லை வரும் அமித் ஷா.. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு.. பாஜகவின் பிளான் இதுதான்!
அமித் ஷாImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Aug 2025 10:27 AM

சென்னை, ஆகஸ்ட் 22 : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah Tamil Nadu Visit), 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். அங்கு நடக்கும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதோடு, பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், பாஜக கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில் தான், அதிமுக பாஜக கூட்டணி அமைத்த நிலையில், தேர்தல் பணிகளில் இருகட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

பாஜக பூத் கமிட்டி மாநாடு

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார். அதாவது, நெல்லை தஞ்சநல்லூரில் பாஜகவின் பூத் கமிட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கவனித்து வருகிறார். மாநாட்டு திடலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Also Read : ‘பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’ அமித் ஷா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

இந்த மாநாட்டில் தான் அமித் ஷா கலந்து கொள்கிறார்.  இதற்காக டெல்லியில் இருந்து மதியம் 2.30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு மாலை 3.30 மணியளவில் வருகிறார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஒத்திகை 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நேற்று நடைபெற்றது.

நெல்லை வருகிறார் அமித் ஷா

ஆனால், மரங்கள் அதிகம் இருந்ததால், ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதுஇதனை அடுத்து, வேறு இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்தனர். பாளையங்கோட்டை புனித யோவான் பள்ளி மைதானத்திலேயோ அல்லது ஆயுதப்படை மைதானத்திலேயோ அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க உள்ளது.

Also Read : அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா

பின்னர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்று தேநீர் விருந்தில் 20 நிமிடம் பங்கேற்கிறார். பிறகு அங்கிருந்து கார் மூலம் தச்சநல்லூரில் நடக்கும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளையும் அவர் நடத்த உள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளார்.