AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

’கலாச்சாரம் மாறிவிடக் கூடாது’ மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேச்சு

Madurai Murugan Maanadu : மதுரை மண்ணில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது நமக்கெல்லாம் பெருமையான விஷயம். ஒருமித்த கலாச்சாரங்கள் மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

’கலாச்சாரம் மாறிவிடக் கூடாது’ மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேச்சு
நயினார் நாகேந்திரன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 20:32 PM IST

மதுரை, ஜூன் 22 : நமது கலாச்சாரம் மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் முருக பக்தர்கள் மாநாடு (Murugan Maanadu) நடைபெறுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர்.

நயினார் நாகேந்திரன் பேச்சு

இந்த நிலையில், இந்த  மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “முருகா முருகா என்று சொன்னால் உருகாதோர் யாரும் இல்லை. முருகா எனும் பெயரில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருப்பதால் முருகனை தமிழ் கடவுள் என சொல்லுகிறோம்.

மதுரை மண்ணில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது நமக்கெல்லாம் பெருமையான விஷயம். ஒருமித்த கலாச்சாரங்கள் மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. எதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் ஒரே கலாச்சாரம். நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு பக்தர்கள் திரண்டுள்ளன்ர. முருகப் பெருமானின் புகழை பரப்பும் இந்த நிக்ழ்வை பார்த்து பலரும் மலைத்து போயுள்ளனர். சொர்க்கபுரியில் இருப்பது போன்ற மேடை உள்ளது அப்படி ஒரு வைப்ரேசன் உள்ளது” என கூறினார்.

தொடர்ந்து, தெலுங்கில் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசினார். அதாவது, பவன் காரு என குறிப்பிட்டு மேடையில் நயினார் நாகேந்திரன் பேசி நிலையில், குலுங்கி குலுங்கி பவன் கல்யாண் சிரித்துள்ளார். மேலும்,  எதாவது ஒரு மொழியை படியுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நம் பக்கத்தில் இருக்கும் தெலுங்கை படிக்கலாம். தமிழ், மலையாளம், தெலங்கும் எல்லாம் ஒரே கலாச்சாரம். அது மாறிவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

முருக பக்தர்கள் மாநாடு

 

கந்தசஷ்டி கவசம் பாடும் 5 லட்சம் பக்தர்கள்

இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாட உள்ளனர். மாநாட்டில் திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், 200 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் 10 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் நிற்கும். மாநாடு நுழைவு வாயில் முதல், மாநாடு நடைபெறும் பகுதிக்கு செல்லும் வரை ஒவ்வொரு 20 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us