Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு.. அண்ணமலையிடன் விசாரிக்க வேண்டும்.. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..

Annamalai: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழ்க்கில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார். 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு.. அண்ணமலையிடன் விசாரிக்க வேண்டும்.. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..
அண்ணாமலை
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jun 2025 13:51 PM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறியது குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்?

இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதனை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை மனு அணுப்பியதாகவும் ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஞானசேகரன் என்பவரை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். காவல்துறையினர் விசாரணையை அடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்திரவிடப்பட்டது. பின்னர் மகளிர் காண சிறப்பு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

அண்ணாமலை பேசியது என்ன?

இந்த தீர்ப்பை தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்த பொழுது ” ஞானசேகரன் இந்த சம்பவத்தின் போது தொலைபேசியில் சார் என யாரோ ஒருவரிடம் பேசியதாகவும் ஞானசேகரன் ஒரு மாத கால் ஹிஸ்டரி தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஞானசேகரன் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பேசிய செல்போன் பதிவும் இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்

ஆதாரம் இருந்தும் அதை நீதிமன்றத்திற்கு கொடுக்காதது தவறான ஒரு விஷயம். இது குறித்து அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.