Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madurai Murugan Maanadu: மதுரையில் பிரமாண்டமாக தொடங்கிய முருகன் மாநாடு.. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு!

Muruga Bakthargal Manadu: மதுரை முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு மதியம் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட மாநாடு இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டிற்காக 8 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

Madurai Murugan Maanadu: மதுரையில் பிரமாண்டமாக தொடங்கிய முருகன் மாநாடு.. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு!
முருகன் மாநாடு - பவன் கல்யாணுடன் அண்ணாமலைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Jun 2025 16:50 PM IST

மதுரை, ஜூன் 22: மதுரையில் (Madurai) இந்து முன்னணி சார்பில் மிக பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு (Murugan Maanadu) தொடங்கி நடைபெற்று வருகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். மதுரை முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு மதியம் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட மாநாடு இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டிற்காக 8 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநாட்டில் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமரும் வகையில் ஒரு லட்சம் இருக்கைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள்:

மதுரை அம்மா திடலில் நடைபெறும் முருகன் மாநாட்டில் 6 அடி உயரத்தில் மேடையும், அதன்பின்பு 10 அடி உயரத்தில் பெரிய மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் மையத்தில் முருகன் வேலுடன் நிற்பது போன்ற பதாகையும், அதன்பின் குன்று, கோயில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் முதல் நிகழ்ச்சியாக பம்பை நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு காவடி எடுத்து வந்தனர். அதனுடன் மேளம், தாளமும் முழங்கி, அரோகரா என்ற கோஷமும் ஒலித்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் 2வது கலை நிகழ்ச்சியாக பறையாட்டமும் நடைபெற்றது. பம்பை, பறையாட்டம் நிகழ்ச்சிக்கு பிறகு, சூரிய நாராயணன் என்ற சிறுவன், முருகன் பாடலை பாடினார். அப்போது, அங்கு கூடி இருந்த முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாடலை கேட்டு ரசித்தனர்.

யார் யார் பங்கேற்பு..?

மதுரை அம்மா திடவில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இது மட்டுமின்றி, ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் பங்கேற்றுள்ளார். இதையடுத்து, முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு, பொன்னாடை அணிவித்து முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்தார்