கொளத்தூரை இழந்தது போல… கோட்டையை இழந்தது போல… மு.க.ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் பதில்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்னங்களுக்கு தவெக ஐடி விங் பதிலளித்துள்ளது. இது குறித்து வெளியான பதிவில் , மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன் 7 : மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 3 மாதங்கள் கூட தாங்குமா என்ற கேள்வியோடு தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறக்க கூடாது என்று பேசினார். இந்த நிலையில் தவெக ஐடி விங், மக்கள் சக்தியின் ஆதரவால் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டோம், ஜனநாயக சக்திகள் எங்களுக்கு துணை நிற்கின்றன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மு.க.ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் பதில்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்னங்களுக்கு தவெக ஐடி விங் பதிலளித்துள்ளது. இது குறித்து வெளியான பதிவில், மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன. ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : 3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி
தவெக ஐடி விங் பதிவு
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம்…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) June 7, 2026
மேலும், கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல. கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க : “பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
மேலும், ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்? என்று கேள்வி எழுப்பப்ப்டுள்ளது. இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி என தெரிவித்துள்ளது.