கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது – தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து கல்லூரி மாணவரை, திருநங்கை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவரை கத்தியால் குத்திய திருநங்கையை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, ஜூன் 30 :தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து கல்லூரி மாணவரை, திருநங்கை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவரை கத்தியால் குத்திய திருநங்கையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், பனையூர் என்ற பகுதியை சேர்ந்த அஜய் தேவகுமாரன். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். 3 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அவர் விடுமுறை முடிந்து ஜூன் 29, 2026 நேற்று கல்லூரி செல்வதற்காக, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த திருநங்கைக்கும் அஜய் தேவகுமாரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் திருநங்கை, திடீரென தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியைக் கொண்டு, மாணவரின் கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிக்க : பீகார் இளைஞர்களை கடத்தி பணம் பறிக்க முயற்சி.. ஆட்டோர் ஓட்டுநர்கள் 4 பேர் கைது.. பூக்கடை போலீசார் அதிரடி!




இதில் பலத்த காயமடைந்த இளைஞரை, பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் உடனே மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடனடியாக விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடி மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கை அபர்ணா, அஜய் தேவகுமாரனின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பயணித்துள்ளார். அப்போது, திடீரென ஒரு காட்டுப்பகுதிக்கு திருநங்கையை அழைத்து சென்ற அந்த மாணவர், அவரின் செல்ஃபோனை பறிந்து அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிலையில், ஜூன் 30, 2026 திருநங்கை அந்த மாணவரை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து எதேச்சையாக பார்த்துள்ளார். அப்போது அவரிடம் பறிந்த செல்ஃபோனை திரும்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த திருநங்கை இளைஞரை ஆத்திரத்தில் தாக்கியது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க : நள்ளிரவில் போதையில் தள்ளாடிய அரசு பேருந்து ஓட்டுநர்; 55 பயணிகளின் உயிருடன் விளையாடிய பகீர் சம்பவம்
திருநங்கையை கைது செய்த காவல்துறையினர், விசாரணைக்கு பிறகு அவரை திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளம் சிறையில் அடைத்துள்ளனர். பொது மக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவரை திருநங்கை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.