மயிலாடுதுறையில் ஆணவக்கொலை? – சினிமாவில் மட்டுமே வரக்கூடிய… – திமுக கடும் கண்டனம்
திமுக வெளியிட்ட அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது. சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது.
மயிலாடுதுறை, ஜூன் 30 : மயிலாடுதுறை மாவட்டம் புதுபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் பாரத்திபன். இவர் அருகில் உள்ள சாத்தன்குடி என்ற கிராமதில் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 30, 2026 இன்று அதிகாலை இருவரும் சாந்தக்குடியில் ஒரு கொட்டகையில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் ஆணவக் கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ரீல்ஸ் முதல்வர் என திமுக கடும் கண்டனம்
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியான அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது. இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது.




இதையும் படிக்க : பீகார் இளைஞர்களை கடத்தி பணம் பறிக்க முயற்சி.. ஆட்டோர் ஓட்டுநர்கள் 4 பேர் கைது.. பூக்கடை போலீசார் அதிரடி!
திமுக வெளியிட்ட அறிக்கை
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு… pic.twitter.com/NBW6hrCkEi
— DMK (@arivalayam) June 30, 2026
இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது. சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க : நள்ளிரவில் போதையில் தள்ளாடிய அரசு பேருந்து ஓட்டுநர்; 55 பயணிகளின் உயிருடன் விளையாடிய பகீர் சம்பவம்
இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா? திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.