கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்.. ஒரே நாளில் 3 தொழிலாளர்கள் கொலை.. பின்னணி என்ன?
Kanyakumari 3 Murder : கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு இடங்களில் கூலித் தொழிலாளி மற்றும் கட்டிடத் தொழிலா என 3 பேர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லிங்கசாமி மற்றும் சிங்கம். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். கூலி வேலை பார்த்து வரும் இவர்களில் லிங்கசாமிக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. சிங்கத்துக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்களது ஊர் பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளை லிங்கசாமி மற்றும் சிங்கம் ஆகியோர் செய்து வந்தனர். வேலை முடிந்ததும் லிங்கசாமி மற்றும் சிங்கம் ஆகிய இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் ஆகும். அதன்படி, சம்பவத்தன்று இரவு லிங்கசாமி மற்றும் சிங்கம் ஆகியோர் இருவரும் ஒன்றாக அந்த பகுதியில் மது அருந்தி உள்ளனர். இவர்களுடன் மேலும் 2 பேர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
லிங்கசாமி – சிங்கம் மீது கல்லால் தாக்குதல்
இதில், மது போதையில் இருந்த 4 பேருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. முதலில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் லிங்க சாமி மற்றும் சிங்கத்தை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். மேலும், அங்கு கிடந்த கல்லால் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில், பலத்த ரத்த காயம் அடைந்த இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதை தொடர்ந்து, இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மேலும் படிக்க: அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம்.. முதல்வர் ஜோசப் விஜய்!




சாலையோரம் உயிரிழந்து கிடந்த இருவர்
பின்னர், சம்பவத்தன்று மறுநாள் காலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக சென்றபோது இருவரும் சாலையோரம் படுத்து கிடப்பதை பார்த்துள்ளனர். அருகே சென்று பார்த்தபோது, அவர்களது தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயத்துடன் ரத்தமும் வடிந்து இருந்தது. மேலும், அவர்கள் இருவரும் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, ஈத்தாமொழி காவல் நிலையத்துக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு சடலங்களையும் வைத்து பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு தாெழிலாளி கல்லா அடித்து கொலை
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இதே போல, சுசீந்திரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சரவணகுமார் என்பவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் 3 கொலைகள் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க: வேகமெடுக்கும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் சேவை திட்டம்.. வெளியான சூப்பர் அப்டேட்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!