கரூரில் வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள், ஆனா இப்போ… – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ஜூன் 3, 2026 அன்று கோயம்புத்தூர் சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், திமுக மீது குறை சொல்வதிலேயே தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குறியாக இருப்பதாக விமர்சித்தார்.
கோயம்புத்தூர், ஜூன் 3 : 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ஜூன் 3, 2026 அன்று கோயம்புத்தூர் சென்று தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு உணவளித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு திமுக மீது குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை என்றார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி பேசியதாவது, திரைப்படங்களில் வசனங்கள் பேசலாம். ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற பின்பும் செய்ய வேண்டிய பணிகளை மறந்து வசனம் பேசுகிறார் விஜய். அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் எதிர்கட்சியின் கடமை. வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல. திமுக மீது குறை சொல்வதிலேயே தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குறியாக இருக்கிறது. மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. அந்தந்த துறையின் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் நடத்தி எப்படி எடுத்து செல்லலாம் என்பதில் கவனம் செலுத்தலாம் என்றார்.




இதையும் படிக்க : காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் – முதல்வர் விஜய் அறிவிப்பு
முதல்வர் விஜய் குறித்து பேசிய செந்தில் பாலாஜி
Coimbatore, Tamil Nadu: DMK MLA V. Senthil Balaji says, “The present government is not functioning in the interest of the people and is showing little intent to fulfil its election promises. Public is closely observing the contrast between the promises made during the election… pic.twitter.com/85dzIhp32F
— ANI (@ANI) June 3, 2026
மேலும் பேசிய அவர், கரூருக்கு வந்து எவ்வளவு அநாகரிகமாக பேசினார்கள். வண்டி மீது ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள். ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் அப்போது நாங்கள் கொடுத்த விளக்கங்களை எல்லாம் ஏற்காமல் ஓட்டுக்காக அவதூறு பரப்பினார்கள். இப்போது டாஸ்மாக் விவகாரத்தில் அந்த துறை அமைச்சர் விளக்கம் தானே கொடுத்து கொண்டிருக்கிறார்? சமூக வலைதளங்களில் இதைத் தான் மக்கள் கேட்கிறார்கள் என்றார்.
இதையும் படிக்க : இன்பதுரை வெற்றி செல்லாது, அப்பாவு வெற்றிபெற்றது உறுதி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கனிமொழி விமர்சனம்
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனிமொழி, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பற்றி கவலை இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றுள்ளதா என தெரியவில்லை. ஆட்சியில் உள்ளவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான். நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள. புதிய ஆட்சி அமைந்த பின் நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள், பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. நடந்தாலும் யார் மீதும் பழி போடாமல் ஆட்சி செய்தவர் கருணாநிதி. ஸ்டாலினினும் அதே வழியில் நடத்தினார் என்று பேசினார்.