காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் – முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். வருகிற ஜூன் 18 , 2026 ஆம் தேதி தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூன் 3 : தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். வருகிற ஜூன் 18 , 2026 ஆம் தேதி தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பெறுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதலமைச்சர் விஜய்ய சந்தித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட்
இது தொடர்பான வெளியான அறிவிப்பில், வருகிற ஜூன் 18, 2026 அன்று தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : த.வெ.க சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்..
தவெக வெளியிட்ட அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) June 3, 2026
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை இடம் தொடர்பாக முதல்வர் விஜய்யிடம் பேசினோம். மாநிலங்களவை இடம் தொடர்பாக பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மாநிலங்களவை எண்ணிக்கையை மிக முக்கியமாக பார்க்கிறோம் என்றார்.
மேலும் பேசிய அவர், அரசு மீது திமுக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்திருக்கிறது. டெல்லியில் நேரம் போதாமையால் காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை. கோவாவுக்கு வரும்படி முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கலாம் வருகிற ஜூன் 2026 உடன் முடிவடையும் நிலையில் அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 18, 2026 அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் தங்ககளது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் 3 இடங்களுக்கும் ஒரே நாளில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க : தமிழக பாஜக மீது அதிருப்தி? அண்ணாமலை ராஜினாமாவும், மேலிட இழுபறியும்.. தீவிர ஆலோசனையில் தலைமை!
நடத்து முடிந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞ
இந்த நிலையில் தான் தவெக சார்பில் ராஜ்யசபா இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது குறித்தும் முதல்வர் விஜய்யுடன் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.